முரண்பாடுகள்- பத்மப்ரியா
பன்னீர் சாரலாய் மழைத்துளி
பாதை நெடுகிலும் நிழல் மரங்கள்
அதிகாலை குயிலின் கூவல்-- குளிர்
மல்லிகைச் சூடி பில்லியனில் நான்
கடற்கரை கோயிலை நோக்கி
விக்டர் ஓட்டும் நீ
காற்றில் கூந்தல் அலைபாய - உன்
காதோரமாய் கன்னம் இழைகையில்
கார சட்னி எடுத்துகிட்டியா இட்லிக்கு? என்றாய்
திறந்தவெளி திரையரங்கில்
டைட்டானிக் பார்த்து
அழவும் முடியாமல் இயல்பாய்
இருக்கவும் முடியாமல்
இறுகிய மனதுடன் திரும்புகையில்
இன்னிக்கி லுங்கி தோய்ச்சியா ?- என்றாய்
தாவி குதித்து தடுக்கி விழும்
கோமாளி காட்சி பார்த்து
தாங்க இயலாமல் நீ சிரிக்கையில்
நகைப்பதுபோல் நானும்
நடிக்கவில்லை யெனில்
நக்கீரன் போல் முறைத்தாய்
தஞ்சை பெரியகோயிலினை
விஞ்சும் பிரம்மாண்டத்தில்
நான் எனும் அகந்தை
அழிந்து நிற்கையில்
தலையாட்டி பொம்மைக்கான பேரத்தை
ஐம்பது காசுகளில் முறித்தாய்
நீ இல்லாதபோது
கடுப்பேற்றும் இந் நினைவுகள்
நீ இருக்கும்போது
கரைந்துபோவது காதலிலா?
என்ன செய்வது?
நாற்பதுக்கு மேல்தான்
ஈஸ்ட்ரோஜென் குறையுமாம்.
- பத்மப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications