வாழ்வெனும் ஆறு
Subscribe to Oneindia Tamil
வாழ்வெனும் ஆறு
வனம் முழுவதும் மலர்ந்திருக்கையில்
புகைப்படம் எடுக்கிறது மனம்
காற்றில்
கட்டவிழ்ந்து இறங்குகின்ற
மலரில் எழுதுகிறது கவிதை
வண்ணமாய் ஒன்றைக் கண்டுவிட்டால்
வடித்தெடுக்க முயல்கிறது காகிதத்தில்
ஓடையின் அருகே நின்று நனையாமல்
எடுக்கிறது ஒலிக்கோர்வைகளை
சேகரிக்கவும் சுமந்து செல்லவும்
சொல்லித்திரியவும்
எப்போதும் முனைகிறது
கரை தளும்பி, நுரை பொங்கி
ஓடுகிறது வாழ்வெனும் ஆறு.












Click it and Unblock the Notifications