விடியற்காலை கனவு...-க.மோகனரங்கன்
மார்கழி மாதம்
ஞாயிறு பணி முடித்து
சென்ற பொழுது...
முழு மதி நாள்
மொட்டை மாடி
வீதி எங்கும் அமைதி
வின்னில் மின்னும் நட்சத்திரங்கள்...
காற்றில் கவிதை படிக்கும்
தென்னை ஓலை..
காலையில் பிறந்த தொட்டி ரோஜா..
சிலிர்க்க வைக்கும் குளிர்..
சிரிக்க வைக்கும் துணை...
ஒற்றை பாய்..
நடுவே ஒற்றை தலையணை...
ஓரப்பார்வையுடன் பாயில் ஓரத்தில் அவள்..
இருளில் கூட ஒளிந்தாள்...
இரேடியம் பெற்றாளோ தோளில்...
எத்தனை காலம் அறியாமலிருந்தேன்...
அழுகு என்பது கண்களால்
காண்பது மட்டுமல்ல என்று..
ஒற்றை தலையணையில் சிரம் சாய்த்தேன்...
ஓரமாய் இருந்தவள்.. அருகில்
நகர்ந்தாள் வெட்கத்துடன்...
வின்னை நோக்கின விழிகள்...
பணத்தை தேடி அலையும் மனிதனை போல...
வேகமாய் நகரும் மேகங்கள்...
ஓ.. தன் காதலியை தேடுகிறதா?
வாழ்க்கை
துன்பமும், இன்பமும் போல...
வானில்...
மறைந்து, மின்னும் நட்சத்திரங்கள்...
வளர்ந்த காதல்.. முதிர்ந்தது போல்..
முழுமதி...
பயண சுமைக்கு சுமைதாங்கி போல்...
வாழ்க்கை சுமைக்கு அவள்...
ஆங்காங்கே சில மின்னல்கள்...
காதலி கண்டதால்.. மேகத்தின்
ஆரவாரமோ?
எப்போதும் எரிச்சலுட்டும் கொசுக்களின்
ரிங்காரம் கூட இசையானது அன்று...
ஆண்களுக்கு..
மனதிற்கு பிடித்தவள்
மனைவியானால்...
ஏழு கண்டங்களும்
அவன் காலடியில் தான்...
இல்லையேல்
எறும்பு கூட எதிர்க்க முடியாத
எதிரியாகி விடும்...
வைரமுத்தின் வரிகளை போல்...
"மரணத்தின் விளிம்பிற்கு சென்று...
வாழ தப்பித்தவன்.. வாழ்வின் ஒவ்வொரு
வினாடியையும் அனுபவிப்பான்"
உண்மைதான்...
நிஜமாகவே உண்மைதான்...
நேரம் கடந்தது...
குளிரும் எல்லை கடந்தது...
அறியாமலே விரல்கள்
அவளை நோக்கி நகர்ந்தது...
வேற்று தீவுக்கு இழுத்து செல்லப்பட்ட
மனிதன் போல...
விரல்கள் எதை எதையோ.. தேடின...
விரல்கள் பட்டதால் விலகினாள்...
விலகியதால் விரல்கள் தேடின...
ஒன்றை பாய் விலகலுக்கு
வேலியிட்டது...
தெரிந்து தான் ஒற்றை
பாய் எடுத்து வந்தாளோ???
இருக்கலாம்... பெண்கள் புத்திசாலிகள்..
அதிலும் இவள் சற்றே அதிகம்...
ஒரு வழியாய் பிடித்தேன்...
பிடிக்கவேண்டிய இடத்தில்...
தேனை உண்ட எறும்பு போல...
திமிற முடியாமல் தோளில்
தலை சாய்ந்தாள்...
அவள் மடி தலையனையானது...
மரணம் கூட இனிமை தான்...
மடிவது அவள் மடியெனில்...
கார் கூந்தலை கைகள் வருடின...
கண்கள் கண்களோடு...
இதயம் இதயத்தோடு...
இடது கை இடையோடு...
உறவு கொண்டன...
அவள் ஒரு வித்தியாசமான
நெருப்பு...
அணைக்க...
அணைக்க...
வெப்பம் அதிகம் தந்தாள்...
மார்கழி குளிரும்...
அவள் வெப்பமும்...
மதி மயங்கச் செய்தன...
தந்நிலை மறந்து..
இதழ் மீது இதழ் பதிய..
இதமான மின்சாரம் பாய்ந்தது...
போராடி வென்றால் எதுவும் சுகம் தான்...
சிறயாதாய் சில தூரல்கள்...
மேகங்கள் கட்டி தழுவியதால்...
தோன்றிய ஆனந்த கண்ணீரோ?
சிலர்த்து எழுந்தேன்....
கனவு...
விடியற்காலை கனவு...
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications