இறுதித்தீர்ப்பு.....
- ரிஷி சேது
இந்த கவிதை எழுதப்படும் இந்த கணத்திலோ
அல்லது இது வெளியாகப்போகும் நிமிடங்களிலோ
இதை வாசிக்க நீங்கள் இருக்கப்போவதில்லை...
ஏனெனில் இதை எழுதிக்கொண்டிருப்பதும்
வாசித்துக்கொண்டிருப்பதும்
உலகின்.....
அவர்கள் தங்களுக்குள்
மிக ரகசியமாய் பேசிக்கொண்டார்கள்..
என்னைப்பற்றித்தானிருக்கும் அல்லது
எனக்கான நாள் பற்றியதாய்தானிருக்கும்...
ஆம், முன் உங்களுக்குத் தெரிந்ததைப்போலவே
எனக்கும் தெரிந்துவிட்டது என் இறுதிநாள்..
மழையும் அதனோடேயான காற்றும்
மரங்களும் நிசப்த இரவை ரசிககமுடிந்ததாய் வைத்திருக்கும்
நிஜங்கள் உணர்த்தும் பயமென்னை ஆட்கொள்ள
மெல்ல உறங்கிப்போனேன்....
நீரில் செவ்வானம் உரச குளித்துப்புறப்பட்ட சூரியன்
சொல்லிப்போகிறது ஏதோ ஒரு நாள் நான் இதை
இந்த பூபாலமொலிக்கும் காலையை,
பூக்கள் சிரிப்பதை, பறவை ஒலிகேட்க திறந்தவெளியில்
குளிப்பதை இழக்கப்போகிறேனென்பதை..
இப்போது என்னை சிலர் நெருங்கி
இயந்திரக்கரம் குலுக்கி
சிகப்புக்கண்கள் எரிக்க, பார்த்து
மின்னனனு ஒலியலைகளில்
மொழிபெயர்த்து சொன்னார்கள் அல்லது
சொல்லின...
எனக்கும் ஆச்சர்யம்தான்
ஆம், நான் பூமிக்கிரகத்தின் கடைசி மனிதன்!!!
உங்களில் பாதிப்பேர் செவ்வாய்க்கும் மீதிப்பேர்
வியாழனுக்கும் சென்றுவிட (சுகமாயிருக்கீங்களா?)
இங்கு, அங்கிருந்து வந்த அக்கிரகத்து ரோபாட்டுகள்
ரேடார் கட்டளைகளையேற்று ஆளுகின்றன
என்னை அவர்கள்(அவைகள்) எக்கிரகத்துக்கும் அனுப்பிவிடலாம்
என் இறுதி நாளில்
அதற்கான ஆயத்த ஏற்பாடுகள் இப்போதே ஆரம்பமாயிருக்கிறது
எச்சரிக்கைகளும் கட்டளைகளும் தொலைதொடர்பு சமிக்கைகளும்
அறிவிக்கப்பட்டன..
ஏ பூக்கூட்டமே, தென்றலே, இனியாருக்காய் நீங்கள்?
இறவாமலிருங்கள் என் இறுதி நாளில் நான்
என்னோடு எடுத்துப்போகவும் கூடும்...
இன்னொரு ரோபாட் அருகே வந்து
மற்றொன்றிடம் எதோ சைகைசெய்ய..
நான் ஊரின் மையப்பகுதிக்கு அழைதுவரப்பட்டேன்
அங்கு ....
உலகின் கடைசிமனிதன் ...
எதோ ஒரு அறிவியல் அற்புதத்தில் தோன்றிய உயிரினம்
சாட்சிகளில்லாமல் ஆடைகளையப்பட்டு
மின்னனுமுறையில் சிலையாக்கப்பட்டேன்...
ஆச்சர்யமில்லை ஒருவேளை
மீண்டும் உயிர்ப்பிக்கப்படலாமென்ற சாத்தியக்கூறுகளோடே....
சிலையாகிப்போகிறேன்........
நான் சிலையாகிப்போன இந்த நிமிடத்தின் நாட்குறிப்பை
வாசிக்க நீங்கள் இருக்கப்போவதில்லை...
ஏனெனில் இதை எழுதிக்கொண்டிருப்பதும்
வாசித்துக்கொண்டிருப்பதும்
உலகின் கடைசி மனிதன்....
- ரிஷி சேது([email protected])
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications