பயம்
Subscribe to Oneindia Tamil

இரவுத் திரை
விடியலில் விலகிவிடும்
மறைத்து வைத்த பொறுப்புகளை,
வெளிச்சத்தில் தள்ளி;
மூளையில், கண்ட,
காணாத காட்சிகள்;
உண்மையை மட்டும்
உள்வாங்க மறுக்கும்
நரம்புகள்;
உண்மை உண்டென்ற
உணர்வை அடக்க முயலும்
இதயம் - தன்
பதை பதைப்பைக் கண்டு
பயந்துவிட்ட நிலையில்
ஓர் உடலில் பல உயிர்களின்
ஒலிக் கலவரம்,
உச்சத்தை அடைந்து
அமைதியில் அழிந்தது,
புயல் விட்டுச் சென்ற
அசைவிலா பூமியாக;
மீண்டும் விடியலின்
ஒளி
நம்மை மீறிய
இயற்கை விதி.
-அனுக்ரஹா([email protected])












Click it and Unblock the Notifications