இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கை விவகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள கவிதை..
களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்திலோ
கண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார்
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும்
இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்று
இடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றன
கண் கலங்கிடக் கண்டனங்கள் பொழிகின்றன
ஐநா சபையும் அப்படியொரு முடிவெடுத்து அறிவிக்க
ஆயத்தமான போது; கம்யூனிஸ்ட் சீனா மட்டும் கண்டிப்பு காட்டி
அதனைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டு
தீவிரவாதிகளைத் தீர்த்துக்கட்டத் தான் வேண்டுமென்று
திடமாய் உரைத்ததாம்
அய்யோ; கம்யூனிஸ்ட்டுகளே - இங்கே
இலங்கையில் போர் நிறுத்தம் என்று
இரட்டை வேடம் போடுகின்றீர்களே; இது நியாயந்தானா?












Click it and Unblock the Notifications