கையிலே தடியிருந்தும்..!

Subscribe to Oneindia Tamil

மகாத்மா,

கையிலே தடியிருந்தும்
அஹிம்சை
ஊன்றி வீர நடை போட்டவன்!

வெள்ளையர்களையே
வெள்ளைக்கொடி
காட்ட வைத்து
வெற்ற
வாகை சூடியவன்!

கண்ணில் அணிந்த
கண்ணாடியை
கால கண்ணாடியாக்கி
இந்தியாவை
சரித்திரம் படைக்க வைத்தவன் !

mahathma gandhi 150th birth day

உப்பு காற்று
வீச வைத்து ,
வெள்ளையர்களை
இதயம் வியர்க்க வைத்தவன்!

வேள்விகள்
பல செய்து,
சத்திய சோதனைகள் செய்து,
அரிச்சந்திரனுக்கு
அடையாளமானவன்!

நாணயமாய்
வாழ்ந்ததால் தான் ,
நாணயங்களின்
நாயகனாகி உலகையே
விலை பேசுகிறான்!

தேசத்தை சேயாக்கி
கொண்டதனால் தான் ,
தன்னையே
தேசதந்தையாக்கி கொண்டாட வைத்தான்!

mahathma gandhi 150th birth day

ஆத்மாவை
ஆராதனை செய்து,
ஆனந்த தேசம் தந்து ,
மகாத்மாவாக உதித்தெழுந்தவனே !
உலகம் உள்ள வரை
ஜீவாத்மாக்கள்
உன்னை வாழ்த்தி கொண்டாடுவோம்!

- இரா.சங்கர் அபுதாபி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+