மறு தேர்தலை சந்திக்க வாருங்கள்.. பார்த்திபன் பரபர கவிதை
மறு தேர்தலை சந்திக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் முன்வர வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் கவிதை மூலம் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் - இயக்குநர் பார்த்திபன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று விட்டு அது குறித்து ஒரு கவிதையை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அந்தக் கவிதை:

முதன்முறையாக ... மறைந்த
முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
மரணத்தின் மர்மம்,
மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள்
மௌனத்தின் மாமர்மம்,
அரசியல் அதர்மங்கள்,
ரிசார்ட்டில் Mla-க்கள்,
ரிமோட்டாய் கோடிகள்,
நடப்பவை நடந்தவை....
விளங்காமல் கலங்கரை
விளக்கத்திலிருந்து நடந்து
சென்றேன். கட்சிகளின்
கல்மிஷங்கள் இல்லாத
Mgr-ன் விசுவாசிகள்,
அதிமுக தொண்டர்கள்,
அறியா பொதுஜனங்கள்
அணையா தீபங்களாய்
அங்கே ஒளியூட்டல் !
அம்மா'என்றழைக்கப்பட்டவரின்
ஆன்மா என்ன நினைக்கும் ?
எனக்கும் அவருக்குமான சில
சந்திப்புகளும் சம்பாஷைனைகளும்
வந்து போயின நினைவில்!
நம்பிக்கை துரோகமும்
துரோகிகளின் நம்பிக்கையும்
எதுவுமே சகிக்கல!
திருமதி சசிகலாவோ
திருமிகு OPS-ஸோ
ஆட்சியமைப்பது
சட்ட பூர்வமேயாகையால்
சட்டு புட்டுன்னு
சட்டசபைக்கு வந்து
மக்கள் பணி பாருங்கள்!
எம்மக்கள் திருந்திவிட்டார்கள்!!!
மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் !
நோட்டுக்காக அல்ல
நாட்டுக்காகவே ஓட்டு!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications