தாயே உனக்கு இணை நீயே...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தாய்மை குறித்த ஒரு கவிதை. !
சுமையாக வந்தேன்
சுகமாக சுமந்தாய்
எட்டி உதைக்கும் தருணத்திலும்
தட்டி கொடுத்து ரசித்தாய்

உன் வளையல் ஓசை
நான் முதலில் கேட்கும் ஒலி
பத்திய உணவென்று தெரிந்தும்
பத்து மாதம் பொறுத்திருந்தாய்
உயிர் தனை கொடுத்து
மறுபிறவி எடுத்தாய்
உன் தொப்புள் கொடி பந்தம்
அதுவே என் முதல் சொந்தம்
உலகத்தில் உள்ள அனைத்து செல்வமும்
உன் கையில் கிடைத்தது போல்
பொக்கிஷமாய் பூரித்தாய்
உயிரே போகும் வலிகள் பல கொடுத்தும்
உற்சாகமாய் மார்போடு கட்டி தழுவி
ஆனந்த கண்ணீர் ஊற்றாயிற்று
அழுதே சாதித்தேன்
அழகாய் பேணி காத்தாய்
அன்பாக அனைத்து
அறிவாய் வளர்த்தாய்
ஆயிரம் உறவுகள் பெற்றாலும்
தாயே உனக்கு இணை நீயே
என்னை சுமந்த உன்னை
ஒரு நொடியேனும் சுமக்கும் வாய்ப்பு கிடைக்குமாயின்
அதுவே என் வாழ்வின் வரமாகும்
- கலை












Click it and Unblock the Notifications