வாழவழி விடுங்கள் அதுபோதும்!

Subscribe to Oneindia Tamil

-கூத்தாநல்லூர் கு.செ.அமீர் ஹம்ஸா (துபாய்)

மாணவச் செல்வங்களின்
அளவில்லா அர்ப்பணிப்பை கண்டு
நம் கண்ணீர் துளிகள்
தாய் மண்ணில்
கரை புரண்டு ஓடுகிறது
உச்சி குளிர்ந்தது
உள்ளம் நெகிழ்ந்தது
இதுதானே ஒற்றுமை
இதுதானே மனிதநேயம்

Poem on Neduvasal

அத்தனை ஊடகமும்
ஆச்ரியப்பட்டு
நம்மை உற்று
நோக்கி
பார்க்கிறது

பாசம் காட்டுவதில்
நாங்கள் சளைத்தவர்கள் அல்ல
நேசம் காண்பதில் நாங்கள்
சோடைகளும் அல்ல

எத்தனை இன்னல்கள்
எம்மை தேடிவந்தாலும்
எம்மண்ணை ஒருபோதும்
விட்டு தர மாட்டோம்

எங்கள் இன விவசாயத்தை
நாங்கள் ஒருகாலும்
தாரை வார்த்து
கொடுக்க மாட்டோம்
இயற்கை தந்த
அருட்கொடையை
தட்டிபறிக்க
வேண்டாம்

நாங்கள் எம்
இன மக்களோடு
மண்ணின்
மைந்தர்களாக
வாழவழி
விடுங்கள்
அதுபோதும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+