பிள்ளை கேட்கும் இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இழுத்தடிக்காமல் பதில் சொல்லுங்கள்.. என் அப்பா எங்கே?
கிருஷ்ணசாமியின் மரணம் மற்றும் கஸ்தூரி மகாலிங்கம் குறித்து கவிஞர் அறிவுமதி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை கிருஷ்ணசாமியின் மரணம் மற்றும் கஸ்தூரி மகாலிங்கம் குறித்து கவிஞர் அறிவுமதி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேரளாவுக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மாரடைப்பால் அங்கேயே மரணமடைந்தார்.அவரது மரணமும் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தின் அப்பா எங்கே தேடலும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த கலங்க வைக்கும் சம்பவம் குறித்து கவிஞர் அறிவுமதி உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வலசை போன பறவைகளே
வந்து
விட்டீரா!
அந்த
வட
நாட்டுச்
சுடு
வெயிலில்
வெந்து
விட்டீரா!
நூலிடறி
நூலகரே
விழுந்து
விட்டாரே!
தடை
நூறு
தந்தும்
எம்
பிள்ளை
எழுந்து
விட்டாரே!
கைநாட்டு கையெழுத்தாய்
மாறக்
கூடாதாம்!
நாம்
கல்வி
எனும்
ஏணியிலே
ஏறக்
கூடாதாம்!
ஈரோட்டுப் பேருழைப்பை
எண்ணிப் பார்!
இந்த
இழிவுகளை
எவர்
இனியும்
மன்னிப்பார்!
கல்வி
கற்றும்
களம்
கண்டார்
அம்பேத்
கார்!
அந்தக்
கல்வி
யற்றும்
கல்வி
தந்தார்
கரிசல்
கார்!
எவன் நாட்டை
எவன்
வந்துத்
த த்தெடுக்க!
இனித்
தமிழ்த்
தலைமை
தான்
வேண்டும்
வென்றெடுக்க!
அப்பாவின் மது குடிக்கு
அப்பாவி
மகன்
செத்தான்!
நேற்று
அன்பு
மகன்
தேர்வெழுத
அப்பாவே
தான்
செத்தான்!
தொடரும் இழவுகளைத்
துண்டிக்க க்
கூடாதா?
இந்தத்
துயருக்கு
வேர்
தேடித்
தண்டிக்கக்
கூடாதா!
எதை விற்றும் பிள்ளைகளைப்
படிக்க
வைப்போம்!
அதில்
இடையூறு
எது
வரினும்
முடித்து
வைப்போம்!
இரக்கமற்ற பாவிகளே!
இழுத்தடித்து
நீங்கள்
கேட்ட
எல்லா
கேள்விகளுக்கும்
பிள்ளை
பதில்
சொல்லி
விட்டான்!
பிள்ளை கேட்கும்
இந்த
ஒரே
ஒரு
கேள்விக்கு
மட்டும்
இழுத்தடிக்காமல்
பதில்
சொல்லுங்கள்....
என்
அப்பா
எங்கே?
-அறிவுமதி
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications