இன்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

Interviewமிகவும் பிரபலமான அந்த பெரிய நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பிற்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்டர்வியூவிற்கு ஏகப்பட்ட பேர் வந்திருந்தனர். அதில் சுதாகரும் ஒருவன்.

பியூன் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான்.

"சுதாகர் யாரு?

பியூன் கூப்பிட, ஒரு நமட்டுச் சிப்பை அவனுக்கு காட்டி விட்டு உள்ளே போனான் சுதாகர்.

உள்ளே... அந்நிறுவனத்தின் மேனேஜர் உட்பட இன்னும் மூன்று பேர் உட்கார்ந்திருந் தார்கள்.

"குட் மார்னிங் சார்...

"எஸ்... ப்ளீஸ் பீ சீட்டட்....


கட கடவென கேள்விகளைக் கேட்டுத் துளைத்தனர் இன்டர்வியூ குழுவினர்.

எல்லாவற்றிற்கும் சளைக்காமல் உடனே பதில் சொன்னான் சுதாகர்.

கடைசியாக மேனேஜர் டர்ன்.

"மிஸ்டர் சுதாகர்...! இந்த கேள்விக்கு நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்க... கரெக்டா சொல்லிட்டா உங்களுக்குவேலை நிச்சயம்" என்றார் மேனேஜர்.

"ஓ.கே சார்...

"கவனமா கேளுங்க.. நீங்க ஒரு கார்ல தனியா போயிட்டிருக்கீங்க.. ஆள் ஆரவமில்லாத அத்துவான காடு. நல்லஇருட்டு நேரம். அங்க ஒரு பஸ் ஸ்டாப்ல மூணு பேர் நிக்கிறாங்க.. ஒருத்தர் வயசான பெண்மணி. நடக்கக் கூடமுடியாதவர். சாகிற நிலையில இருக்கார்.

இன்னொருத்தர் உங்களுடைய பழைய நண்பர். ஒரு காலத்துல உங்க உயிரையே காப்பாற்றீயவர்.

மூன்றாவதா போன வாரம் தான் உங்களுக்கு காதயா கிடைத்த அற்புதமான அழகி. உங்க வாழ்க்கையிலஎப்படிப்பட்ட ஒரு பொண்ண அடையணும்னு நெனச்சீங்களோ அப்படிப்பட்ட அழகான உங்கள் காதலி. இந்தநிலையில நீங்க யார உங்க கார்ல ஏத்திக்கிட்டுப் போவீங்க..

ஒரு கண்டிஷன்! ஒங்க கார்ல நீங்க ஒரே ஒரு நபர மட்டும்தான் ஏற்றிக் கொள்ள முடியும். இப்ப யார ஒங்க கார்லஅழைச்சிட்டுப் போவீங்க..

சாவை நெருங்கிட்டிருக்க அந்தப் பெண்மணியை மனிதநேயத்தோட ஆஸ்பத்திக்கு அழைச்சிட்டுப் போவீங்களா?உங்க உயிரை ஒரு காலத்துல காப்பாத்துன நண்பரை, நன்றி மறக்காம கார்ல அழைச்சிக்கிட்டு போவீங்களா?அல்லது இப்பத்தான் அரும்பியிருக்கும் உங்க காதலுக்கு மதிப்பு கொடுத்து உங்க சமீபத்திய காதலிய ஏத்திக்கிட்டுப்போவீங்களா?

நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்க... என்று கேள்வியை முடித்தார் மேனேஜர்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொன்னான் சுதாகர்.

"வெரி குட்... ஒரு குறுகிய வட்டத்தைத் தாண்டி சரியா சிந்திச்சிருக்கீங்க... நிச்சயமா உங்களுக்கு வேலை உண்டு..."என வாழ்த்தி வழி அனுப்பினார் மேனேஜர்.

அப்படி என்ன பதில் சொல்யிருப்பான் சுதாகர்?

சுதாகர் சொன்ன பதில்...

கார் சாவியை என் நண்பன்கிட்ட கொடுத்து அந்த வயதான பெண்மணிய ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகச்சொல்லிட்டு.. பஸ் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி என் காதலியோட ஜாலியா பஸ்ல போவேன்.

- மன்னை பாஸ்கர்([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. அஞ்சு நிமிஷம்
2. குழப்பம்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+