குழப்பம்
நேசமுள்ள தோழி தேவிக்கு...!
நலம், நலமே விழைகிறேன். நான் மிகவும் குழப்பத்தில் இருக்கும் போதெல்லாம் உன்னிடம் ஆலோசனை பெற்று முடிவெடுப்பதேஎன் வழக்கம் என்பதை நீ அறிவாய். இப்போதும் மிகப் பெரிய குழப்பத்தில்தான் எழுதுகிறேன்.
என்னுடன் அலுவலகத்தில் பணிபுயும் ஒருவருடன் எனக்குக் காதல் ஏற்பட்டது. இருவரும் மனம் விட்டு பேசி திருமணம் செய்துகொள்வதென முடிவெடுத்தோம். இந்தத் தருணத்தில் என்னுடைய தந்தையார் இறந்து விடவே வயதான தாயையும், வயது வந்ததங்கையையும் கரைசேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பொருளாதார பற்றாக்குறையினால் உறவினர் ஒருவரிடம் உதவி நாடிப் போனேன். அவரோ, தன் மகனை திருமணம் செய்துகொள்வதாயிருந்தால் உதவுகிறேன் என்றார். குழப்பத்தோடு வீடு திரும்பிய வேளையில் தன் தம்பி மகனுக்கு என்னை மணம்செய்து கொடுக்க அச்சாரம் போட்டுக் கொண்டிருந்தாள் என் அம்மா.
மன அமைதிக்காக பக்கத்திலுள்ள பூங்காவிற்கு சென்றேன். அங்கு நம்முடன் கல்லூரியில் படித்த ராஜனைச் சந்தித்தேன். படிக்கும்காலத்தி-ருந்தே என்னைக் காத-லிப்பதாகவும், சொல்லத் தயங்கியதாகவும் நல்ல வேலையில் செட்டில் ஆகி நிறையசம்பாதிப்பதாகவும் சொன்னான். என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவிரும்புவதாகவும் சொன்னான். பலமுறை என்னை சந்திக்கமுயற்சித்தும் முடியவில்லை என்றான்.
மறுநாள் எம்.டி.யின் மகன் வெளிநாட்டில் இருந்து வருவதால் குழப்பத்துடன் சீக்கிரமே அலுவலகம் சென்று விட்டேன்.ஏர்போர்ட்டி-ருந்து நேராக அலுவலகம் வந்த எங்கள் எம்.டி.யின் மகன் என் அழகில் மயங்கி விட்டதாகவும், என்னை மணந்துகொண்டு தன்னுடன் வெளிநாடு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் மேனேஜர் சொன்னார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னுடைய குழப்பத்திற்கு நீதான் ஒரு முடிவு சொல்ல வேண்டும்.
நான் எந்த விமானத்தில் வெளிநாடு செல்வது நம்முடைய இந்தியன் ஏர்லைன்சிலா? அல்லது வெளிநாட்டு விமான சர்வீசிலா?
இப்படிக்கு
உன் அன்புத் தோழி சுதா.
- மன்னை பாஸ்கர்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications