வேலை கிடைச்சாச்சு!
"சார் ஒரு போன் பண்ணிக்கலாங்களா?"
"லோக்கலா? எஸ்.டி.டியா..? தம்பி"
"லோக்கல்தாங்க"
"இந்த போன்ல பண்ணிக்கப்பா..." என்று மேஜை மேல் இருந்த போனைக் காட்டினார் கடைக்காரர்.
ரிசீவரை எடுத்து நம்பரை அழுத் தினான் குமார்.
கொஞ்ச நேரம் காத்திருந்த பிறகு பேச ஆரம்பித்தான்.
"ஹலோ மேடம் வணக்கங்க...! உங்க வூட்டு தோட்டத்த வெட்டி சீரமைக்கிற வேலைய எனக்குத் தருவீங்களா மேடம்?"
"சாரிப்பா தம்பி...! ஒரு வாரம் முன்னாடிதான் அந்த வேலைய வேறொரு பையனுக்குக் குடுத்தேன்."
"மேடம்! இப்ப நீங்க பேசியிருக்குற ஆளுக்கு குடுக்குற கூலியில பாதி குடுத்தாக் கூட போதுங்க.. நான் அந்தாள விட சிறப்பா வேலைசெய்வேங்க..."
"பரவாயில்லப்பா.. இப்ப வேலை செய்யற பையனே சிறப்பாத்தான் செய்யுறான்."
"மேடம் அந்த வேலைய எனக்கு குடுத்தீங்கன்னா... தோட்டம் மட்டுமில்லாம வூட்டைச் சுத்தி நடந்து போற புல் பாதை, வூட்டுக்காம்பவுண்டுக்கு வெளியில இருக்குற குப்பையெல்லாம் கூட தினமும் சுத்தம் செய்வேன்...!"
"சாரிப்பா! உனக்கு வேலை குடுக்கமுடியலையேன்னு வருத்தமாத்தான் இருக்கு. இருந்தாலும் நான் ஏற்கனவே ஒரு பையனை வேலைக்குசேர்த்துட்டேன். பாவம்! உனக்காக அவனை வேலைய விட்டு நீக்க முடியாது. ரொம்ப ரொம்ப சாரி." எனச் சொல்லி போனை வைத்தார்அந்தப் பெண்மணி.
குமாரும் ரிசீவரை வைத்து விட்டு "எவ்வளவுங்க ஆச்சு?" என்று கடைக்காரரிடம் கேட்டான்.
குமாரின் டெலிபோன் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர் "தம்பி உன்னோட முயற்சியை பாராட்டுறேன். வேலைகிடைக்கலையேன்னு கவலைப் படாதே! நான் உனக்கு ஒரு வேலை போட்டுத் தர்றேன்." என்றார்.
"பரவாயில்லங்க நான் ஏற்கனவே ஒரு வேலையில இருக்கேன். இப்ப போன்ல கூட அந்த வேலையைத்தான் கன்ஃபார்ம்பண்ணிக்கிட்டேன்..." என்று சொன்ன குமார், போனுக்கு காசைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டினான்.
- மன்னை பாஸ்கர்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
1. அஞ்சு நிமிஷம்
2. குழப்பம்
3. இன்டர்வியூ
4. சாலமன் பாப்பையாவுடன் ஒரு சந்திப்பு
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications