காதல் அழிவதில்லை
வானம் தவணை முறையில் வெளிச்சத்தை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கும் மாலை நேரம்.
நீங்க எப்படி ஆரம்பிக்க போறீங்க? சுஜாதா கேட்டாள்.
அவள் காதலன் சுந்தர் சலித்துக் கொண்டான்," சே.. காதலை காதலிக்கிட்ட சொல்ற அவஸ்தையைவிட வீட்ல சொல்ற அவஸ்தை தாங்க முடியலை".
சுஜாதா, "நீங்க கண்டிப்பா சொல்லிடுவீங்களா? என்றாள்.
சுந்தர், சொல்லாமல்.. நான் அப்பாகிட்ட எப்படி சொல்றதுன்னு ஒத்திகை பார்த்துட்டேன். நீயும்கண்டிப்பா சொல்லிடு" என்றான்.
சுஜாதா பதறினாள், "சம்மதிக்கலைன்னா..?"
சுந்தர் தீர்மானமாக சொன்னான், சம்மதிச்சா நல்ல சன்னதியில கல்யாணம்- சம்மதிக்கலைன்னாநாளை ROMல் கல்யாணம்"- இருவரும் புறப்பட்டார்கள்-
சுந்தர் வீடு-
அப்பா பாலசந்தர் கத்தினார்- "உனக்கு கல்யாணத்துக்கு இது தருணம் அல்ல- நான் செத்து போயிடலைஉனக்கு எப்ப பெண் பார்க்கணும்னு எனக்கு தெரியும் அது வரைக்கும் பேசாமல் இரு- நான் வேறஎதையும் கேட்க தயாராயில்லை".
சுஜாதா வீடு-
விவாகரத்தான அக்கா வித்யா திட்டினாள்- "இன்னும் படிப்பு முடியலை பெரிசா படிச்சு முன்னுக்குவரப் போறேன்னு சொன்னே- காதல், கத்திரிக்காய் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு படிக்கிறவழியை பாரு- உனக்கு காதல் இப்ப ரொம்ப முக்கியம் இல்லை- வேற ஏதாவது என் கிட்டசொல்லணுமா?
ROM
இனிதாக திருமணம் நடந்தது- மணமக்கள் இருவரும் மாலையும் கையுமாக வெளியே வந்தார்கள்-அதிர்ந்தார்கள்- வெளியே சுந்தரும் சுஜாதாவும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்- சற்று முன் திருமணம்நடந்தது அல்லவா? அதில்
மணமகன்- பாலசந்தர்(சுந்தர் அப்பா)
மணமகள்- வித்யா(சுஜாதா அக்கா)
- அ. முஹம்மது இஸ்மாயில்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
1. தேவை இந்த மனங்கள்
2. தாயின் காலடியில்..
3. மணவாழ்வு
4. அழகு
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications