Exclusive : கருப்பு பூஞ்சை என்றால் என்ன..? யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்..? விவரிக்கும் Dr.சரவணன்..!
மதுரை: கருப்பு பூஞ்சை நோய் என்றால் என்ன என்பது பற்றியும் யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படலாம் என்பது குறித்தும் எளிய நடையில் விவரித்துள்ளார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான சரவணன்.
அதன் விவரம் பின்வருமாறு;
கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
மியூ கோர்மைகோஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக அத்தகைய பாதிப்பு இருந்து வருகிறது. பாக்டீரியா வைரஸ் போல காற்றிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன. அவை மெல்ல மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும் பின்னர் மூளைப்பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கண் பார்வை இழப்பு உறுப்புகள் பாதிப்பு உச்சபட்சமாக உயிரிழப்பு கூட நேரிடலாம்.

யாரை எளிதில் தாக்கும்?
சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவர்கள், கொரோனா தீவிரமாக பாதித்து ஸ்டீராய்டு செலுத்திக் கொண்டவர்கள் நோய் எதிர்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சையில் இருப்பவர்கள் உறுப்பு மாற்று சிகிச்சை.
அறிகுறிகள் என்ன?
தீவிர தலைவலி, கண் எரிச்சல், கண் சிவப்பாகுதல், வாய்இமூக்கு,
கண் பகுதிகள் கருப்பாக மாறுதல், கண்ணில் வலி மற்றும் வீக்கம்,சைனஸ் பாதிப்பு திடீரென பார்வை குறைதல்.
பாதிப்பு அதிகரித்தது ஏன்?
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருந்து வந்தது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்ததன் விளைவாக ஸ்டீராய்டு பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்டீராய்டு சிகிச்சையால் நோய் எதிர்பாற்றல் குறைந்தவர்கள்இ அதன் பின்னர் அதனை மேம்படுத்திக் கொள்ளத் தவறுவதால் பலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தற்பொழுது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகள் தாமாகவே வீட்டிலேயே குழாய் நீரை பயன்படுத்தி நீராவி பிடித்துக் கொள்ளும் காரணத்தினாலும் இந்நோய் அதிகரிக்கிறது.

சிகிச்சைகள் என்ன?
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 2 வாரம் முதல் 6 மாதங்கள் வரை சிகிச்சையளிக்க வேண்டும்.சிலருக்கு பல்நோக்கு சிகிச்சைகள் அவசியம். குறிப்பாகஇ காதுஇ மூக்கு தொண்டை மருத்துவ சிகிச்சைகள் ரத்த நாள சிகிச்சை முறைகள் கண் சிகிச்சை முறைகள் நரம்பியல் சிகிச்சைகள் மூளை சார்ந்த சிறப்பு சிகிச்கைள் மூளை சார்ந்த சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
எப்படித் தடுப்பது?
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் நோய் எதிர்பபு சக்தியை மேம்படுத்துதல்இ கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு காது மூக்கு தொண்டை பரிசோதனை செய்தல்இ ஊட்டச்சத்து மிக்க உணவு சாப்பிடுவது மது புகைப்பழக்கத்தைக் கைவிடுதல் உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும்
அரசு செய்ய வேண்டியவை
அரசு தற்பொழுது இந்த நோயினை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளது. மேலும் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி கட்டயாமாக போட்டுக் கொள்ள சட்டம் கொண்டு வர வேண்டும். கருத்தடை செய்து கொள்வதற்கு ஊக்கத்தொகை கொடுப்பது போன்று தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கும் கொடுத்தால் மிக அதிகமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வாய்ப்புண்டு அது மட்டுமல்லாது அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் செல்லும் வண்ணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். சிறப்பாக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அரசானது விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
கட்டுரையாளர் Dr.சரவணன், Ex Mla
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications