இனி மனிதர்களுக்கு வேலையே இருக்காது? மொத்தமாக காலி செய்யும் AI.. உடைத்து பேசிய கூகுள் சிஇஓ
சியாட்டில்: ஏஐ காரணமாக வேலையிழப்புகள் நடக்குமோ என்ற அச்சம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்பச் சில இடங்களில் வேலையிழப்பு நடப்பதாகச் செய்திகளும் வெளியாகிறது. இதற்கிடையே ஏஐ வேலைகளை மொத்தமாகக் காலி செய்யுமா என்ற அச்சம் தொடர்பாகக் கூகுள் கிளவுட் பிரிவின் சிஇஓ தாமஸ் குரியன் சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் வளர்ந்து வருகிறது. அதேநேரம் ஏஐ காரணமாக வேலையிழப்பும் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஏஐ காரணமாக மிகப் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படும் என்று பல்வேறு சர்வதேச வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

கூகுள் கிளவுட்
இதற்கிடையே கூகுள் கிளவுட் பிரிவின் சிஇஓ தாமஸ் குரியன் ஏஐ தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளை நீக்குவதற்குப் பதிலாக அவற்றை மேம்படுத்தவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏஐ காரணமாக ஐடி துறையில் பரவலாகப் பணிநீக்கங்கள் நடந்து வரும் சூழலில், அவர் இதுபோன்ற கருத்துகளைக் கூறியுள்ளார்.
கூகுளை பொறுத்தவரை இப்போது பல்வேறு துறைகளில் அது கவனம் செலுத்தி வருகிறது. அதில் குறிப்பாக கிளவுட் பிரிவில் கூகுள் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்தக் கூகுள் கிளவுட் பிரிவின் தலைவரான இந்திய- அமெரிக்கரான தாமஸ் குரியன், AI என்பது மனித உற்பத்தித்திறனை அதிகரிக்கும் ஒரு கருவியே தவிர, வேலை நீக்கத்திற்கு அது காரணமில்லை என்று தெரிவித்தார்.
சுந்தர் பிச்சை
முன்னதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் கிட்டத்தட்ட இதே கருத்துகளைக் கூறியிருந்தார். அதையே தான் இப்போது குரியனும் சொல்லியுள்ளார். கூகுள் இன்ஜினியர்கள் ஏஐ டூல்களை பயன்படுத்துவதால் அவர்களின் உற்பத்தித் திறன் 10% வரை அதிகரித்துள்ளதாகக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை குறிப்பிட்டிருந்தார். கூகுள் கிளவுட் தலைவர் தாமஸ் குரியனும் இப்போது கிட்டத்தட்ட அதே கருத்தைக் கூறியுள்ளார்.
மனிதர்களை நீக்காது
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் "மனிதத் திறன்களை மேம்படுத்துவது மட்டுமே AIஇன் முக்கிய நோக்கம்.. மனிதர்களை நீக்குவது இல்லை.! வேலை நீக்கம் இல்லாமல் AI எப்படிச் செயல்திறனை மேம்படுத்துகிறது என்பதற்கு , கூகுளின் Customer Engagement Suite ஒரு மிக சிறந்த உதாரணம். கடந்த ஆண்டு இதை நாங்கள் கொண்டு வந்தோம். இது AI வாடிக்கையாளர் சேவை கருவிகளின் தொகுப்பாகும். ஆரம்பத்தில் சிலருக்குப் பயம் இருந்தது. ஆனால், இப்போது வரை பணி நீக்கம் எதுவும் நடக்கவில்லை. அதேநேரம் உற்பத்தித் திறனும் கணிசமாக அதிகரித்துள்ளது.
AI வழக்கமான வாடிக்கையாளர் கேள்விகளைக் கையாள உதவுகிறது.. இதன் மூலம் ஏஜெண்டுகள் சிக்கலான பணிகளில் கவனம் செலுத்த முடிகிறது.. இது மக்களின் திறன்களை மேம்படுத்துகிறதே தவிர, அவர்களை மாற்றுவதில்லை" என்றார்.
சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் கிட்டத்தட்ட இதே கருத்தைக் கூறுகிறார். கடந்த ஜூன் மாதம் பாட்காஸ்ட் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "AI கருவிகள் கோடிங்கில் இருக்கும் சிக்கலைக் கண்டறியவும் அதன் பிழைகளை நீக்கவும் உதவும். அதாவது நமது பொறியாளர்களுக்குக் கூடுதல் உதவியைக் கொடுக்கும். ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். AI என்பது மனிதர்களுக்குத் துணை நிற்கத் தானே தவிர, அவர்களை மொத்தமாக மாற்றாது" என்றார்.
உண்மை என்ன!
குரியன் இப்படிச் சொன்னாலும் கூட ரியாலிட்டி அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. ஏஐ காரணமாகப் பல்வேறு இடங்களிலும் வேலையிழப்பு நடப்பதாகவே தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. கூகுள் அவுட்சோர்ஸ் செய்தே ஒரு நிறுவனத்திலேயே ஏஐ காரணமாக 200 பேர் வேலையிழந்ததாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications