"மனிதர்களை தூக்கி சாப்பிடும் AI.." நோபல் பரிசு வென்ற பிரபலம் சொன்ன வார்த்தை! இது ரொம்ப முக்கியம்
சியாட்டில்: வரும் காலத்தில் AI எப்படி இருக்கும்.. அதன் பயன்பாடு எந்தளவுக்குச் செல்லும் என்பது குறித்தும் பல்வேறு வாதங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே எதிர்காலத்தில் மனிதர்களைப் போன்ற ஏஐ கருவிகளை உருவாக்குவது தொடர்பாக உலகின் இரு முக்கிய AI வல்லுநர்களுக்கு இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏஐ துறை இப்போது தான் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது. ஏஐ எந்தளவுக்கு எந்தளவுக்குத் துல்லியமாக இருக்கும்.. அதன் திறன் எந்தளவுக்கு இருக்கும் என்பதில் இன்னும் வல்லுநர்களுக்கே கூட ஒருமித்த கருத்துகள் இல்லை. இதற்கிடையே கூகிள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் மெட்டா நிறுவனத்தின் முன்னாள் ஏஐ தலைவரான யான் லெகூன் இருவருக்கும் இது தொடர்பாக விவாதம் நடந்துள்ளது.

ஏஐ விவாதம்
இதில் டெமிஸ் ஹசாபிஸ் உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசை வென்றவர். அதேபோல யான் லெகூன் டூரிங் விருதை வென்றவர். ஏஐ துறையில் மிக முக்கிய ஆளுமைகளாக இவர்கள் கருதப்படும் நிலையில், இவர்கள் சொல்லும் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ட்விட்டர் தளத்தில் பொது நுண்ணறிவு (General Intelligence) குறித்தே இருவரும் விவாதித்துள்ளனர்.
ஓபன் ஏஐ மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள், ஏஜிஐ என்பது மனிதர்களுக்கு இணையான நுண்ணறிவைப் பெற்றிருக்கும் என்று நம்புகிறது. அதாவது ஒரு நாள் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போன்ற ஏ.ஐ டூல்கள், மனிதர்களைப் போலவே இருக்கும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது நாம் எதற்கெல்லாம் ஒரு ஏஐ டூலை பயிற்றுவிக்கிறோமோ.. அதில் அவை சிறந்து விளங்கும். ஆனால், பயிற்றுவிக்காத விஷயம் பற்றிக் கேட்டால் அதற்கு விடை சொல்லத் தெரியாமல் திணறும்.
ஏஜி என்றால் என்ன
இந்த இடத்தில் தான் AGI வருகிறது. மனிதர்கள் எதிர்பாராத சிக்கல் ஏற்படும் சூழல்களிலும் கூட யோசித்து, அந்தச் சிக்கலுக்குத் தீர்வை காண முயல்கிறார்கள். மனித இனம் இந்தளவுக்கு முன்னேறவும் இந்தப் பண்பு தான் முக்கியம். வரும் காலத்தில் ஒரு நாள் இதே பண்புகள் ஏஐ டூல்களுக்கும் போகும் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும்.
இப்போது இருக்கும் சாட்ஜிபிடி, ஜெமனி உள்ளிட்ட கருவிகள் AGIல் மனிதர்களை நெருங்கக் கூட முடியாது. திரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளைச் செய்வதில் மட்டுமே இப்போதைய ஏஐ டூல்கள் சிறந்ததாக உள்ளன. AGI பிரிவில் 10 வயது குழந்தையை விடக் குறைவாகவே அவர்களுக்கு அறிவு இருக்கிறது. இது தொடர்பாகவே இரு வல்லுநர்களும் விவாதித்துள்ளனர்.
விவாதம்
இது குறித்து யான் லெகூன் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை AGI என்று ஒன்றே தனியாக இல்லை. மனிதர்களிடமும் கூட அது இல்லை என்பது தான் எனது கருத்து. மனித நுண்ணறிவு மிகவும் சிறப்பு வாய்ந்தது.. நாம் இந்த நிலையை அடையப் பல ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளோம். இந்த மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும், ஒரே நபரால் குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும். எல்லா மனிதர்களும் எல்லாத் துறைகளிலும் சிறப்பு வாய்ந்தவராக இருக்க முடியாது" என்றார்.
எல்லாவற்றையும் செய்யும்
அவரது இந்தக் கருத்துக்குத் தான் கூகிள் டீப்மைண்ட் சி.இ.ஓ டெமிஸ் ஹசாபிஸ் பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மனித மூளைகள் தான் இதுவரை அறியப்பட்ட உலகின் மிகச் சிக்கலான அமைப்புகளில் ஒன்றாகும். அதற்கு உயிரியல் என்பது தான் அடிப்படை என்றாலும், அதில் இருக்கும் கற்றல் பண்புகளை ஏஐ அமைப்புகளாலும் அடைய முடியும்" என்றார்.
எலான் மஸ்க்
வரும் கால ஏஐ டூல்கள் டூரிங் இயந்திரத்தை போல இருக்கும் என அவர் குறிப்பிட்டார். டூரிங் இயந்திரம் என்பது அன்லிமிடட் டேட்டா மற்றும் அன்லிமிடட் ரிசோர்ஸ் இருக்கும் ஒரு கம்ப்யூட்டராகும். அதுபோல ஏஐ டூல்கள் மாறும்போது மனிதர்களால் செய்யும் அனைத்து வேலைகளையும் ஏஐ டூல்களாலும் செய்ய முடியும் என்பதே அவரது கருத்து. எலான் மஸ்க் கூட டெமிஸ் ஹாசபிஸ் சொல்வதே சரி என ஆமோதித்துள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications