AI-யால் வரும் பேராபத்து.. குழந்தைகளுக்கு வார்னிங்.. பட்டியலிட்ட போப் லியோ XIV
வாடிகன்: செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) இளம் வயதினரின் அறிவு, நரம்பியல் வளர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று போப் லியோ XIV எச்சரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு குறித்து வாடிகன் கவலை
கடந்த ஏப்ரல் மாதம் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து புதிய போப்பாண்டவராக லியோ XIV தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இந்நிலையில் தான் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பற்றி போப் லியோ கவலை தெரிவித்துள்ளார்.
அதாவது செயற்கை நுண்ணறிவு மற்றும் நெறிமுறைகள் குறித்த மாநாடு வாடிகனில் நடந்தது. அதில் போப் லியோ பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய தொழில்நுட்பங்கள் மனித குலத்திற்கு எதை அர்த்தப்படுத்துகின்றன என்ற கேள்வி உள்ளது. செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி மக்களின் பன்முகத்தன்மையை மதிக்கும். அதே வேளையில், ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தையும் பாதுகாக்குமா? ஒவ்வொருவரின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது பற்றி மதிப்பிட வேண்டும்.
குறிப்பாக தற்போதைய தலைமுறையினர் தகவல்களை மிக விரைவாக நாடி செல்கின்றனர். இதில் ஆபத்து உள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குறித்து நாங்கள் அனைவரும் அக்கறை கொண்டுள்ளோம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் அவர்களின் அறிவு மற்றும் நரம்பியல் வளர்ச்சியில் ஏற்படும் விளைவுகள் பற்றி கவலைப்படுகிறோம். ஆன்மீக நாட்டம், வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலை தருகிறது.
கடவுள் கொடுத்த திறன்களையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ளும் திறனை குழந்தைகளுக்கு வழங்குவதில் தான் ஒரு சமூகத்தின் நல்வாழ்வு அடங்கி உள்ளது. ஞானம் என்பது வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்வதோடு தொடர்புடையது. அது வெறும் தரவுகளுடன் கிடைப்பது மட்டும் அல்ல’’ என்று தனது கவலையை பகிர்ந்தார்.
முன்னதாக மறைந்த போப் பிரான்சிஸ் தனது கடைசி காலத்தில் ஏஐ குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தார். அப்போது அவர் செயற்கை நுண்ணறிவால் மனித குலத்துக்கு ஏற்படும் ஆபத்து பற்றி தொடர்ந்து கூறிவந்தார். அதேபோல் அதனை சரிசெய்ய சர்வதேச அளவில் ஒப்பந்தம் வேண்டும் என்று தெரிவித்தார். அவரது மறைவுக்கு பிறகு தற்போது போப்பாக லியோ வந்துள்ளார். இவரும் போப் பிரான்சிஸ் வரிசையில் ஏஐ குறித்த கவலையை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications