AI: காதலியிடம் என்னை பற்றி போட்டுக்கொடுத்த சாட்ஜிபிடி.. ஏஐ காட்பாதர் பகிர்ந்த சுவாரசிய தகவல்
சென்னை: செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனிதனை கட்டுப்படுத்தும் அளவுக்கு அபாயகரமானதாக மாறிவிடும் என்று அத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், ஏஐ காட்பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹின்டன், தனது வாழ்வில் நடந்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது காதலி தன்னைப் பற்றி கேட்ட போது சாட்ஜிபிடியிடம் கேட்டதாகவும், அதற்கு சாட்ஜிபிடி கூறியதையும் பகிர்ந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட்டது. ஐடி உள்பட பல துறைகளில் ஏஐகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. ஏஐகளால் வேலை இழப்புகள் ஒருபக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

AI-இன் தந்தை ஜெஃப்ரி ஹின்டன்
இன்னும் 5 ஆண்டுகளில் 99 சதவீத வேலைகள் ஏஐயால் பறிக்கப்படும் என்று பகீர் தகவலும் வெளியாகியுள்ளது. இது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே செயற்கை நுண்ணறிவுகள் மாறிவிட்டன என சொல்லும் அளவிற்கு அதன்பயன்பாடு அதிகரித்து வருகிறது.
ஜெஃப்ரி ஹின்டன், AI-இன் தந்தை எனப் போற்றப்படுபவர், தனது முன்னாள் காதலி ChatGPTயைப் பயன்படுத்தி தன்னை பிரிந்த சம்பவத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் ஹின்டன் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்தார். அவர் கூறியதாவது:
எனது காதலி கேட்டதற்கு
"எனது காதலியுடன் எனக்கு உறவில் முறிவு ஏற்பட்ட போது, நான் எவ்வளவு மோசமானவன் என்பதை சாட்ஜிபிடி மூலம் சொல்லச் சொன்னார். உடனே என் நடத்தை எவ்வளவு பயங்கரமானது என்பதை சாட்போட் விளக்கியது. நான் மோசமானவன் என்று நினைக்கவில்லை, அதனால் அது என்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஏஐ மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு."
ஹின்டன் மேலும் கூறுகையில், வேலை இழப்புகள் முதல் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் பெரும் நுண்ணறிவு இயந்திரங்கள் வரை பல ஆபத்துகள் இருப்பதாக அவர் எச்சரித்தார். அதே நேர்காணலில் ஹின்டன் மேலும் கூறுகையில், "ஏஐ அசிஸ்டென்ட்கள் மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறும்போது, அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம் அல்லது சாத்தியமற்றது" என்றார்.
மனிதர்களை விட திறம்பட செயல்படும்
இதற்குத் தீர்வாக, ஏஐ மாதிரிகளை தாயைப் போல் செயல்பட பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஹின்டன் நம்புகிறார். "அதிக புத்திசாலித்தனமான ஒரு உயிரினம், குறைவான புத்திசாலித்தனமான உயிரினத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு உதாரணம் மட்டுமே நமக்குத் தெரியும், அது தாயும் குழந்தையும்," என்று அவர் விளக்கினார்.
ஏஐ அந்த அளவிலான பெரும் நுண்ணறிவை அடைந்ததும், அது "மனிதர்களை விட திறம்பட செயல்படும் திறனைப் பெறக்கூடும்" என்றும் ஹின்டன் எச்சரித்தார். 2023 இல் கூகிளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஏஐயின் ஆபத்துகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications