ஏஐ மனித குலத்தையே அழிக்கும்! தப்பிக்க "இது" மட்டுமே ஒரே வழி.. AI காட் பாதர் கொடுத்த முக்கிய வார்னிங்
சியாட்டில்: ஏஐ ஒரு பக்கம் வேகமாக வளர்ந்து வரும் அதேநேரம் ஏஐ ஆபத்துகளும் அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ டூல்களின் காட் ஃபாதராக அறியப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் ஏஐ மனிதக் குலத்தையே அழிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறார். அதேநேரம் இதில் இருந்து தப்பிக்கவும் கூட ஒரு வழி இருக்கிறதாம். அதையும் அவர் விளக்கியிருக்கிறார்.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. அது மனிதர்களுக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதேநேரம் ஏஐ மூலம் பல ஆபத்துகளும் வரலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ புரட்சிக்கு அடித்தளமிட்ட ஏஐ காட்ஃபாதர் என அறியப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் இது தொடர்பாக முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஏஐ ஆபத்துகள்
பிரிட்டிஷ்- கனடா ஆய்வாளரான ஜெஃப்ரி ஹிண்டன், இதன் ஆபத்துகள் குறித்துத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஏஐ தொழில்நுட்பம் மனிதக் குலத்தையே அழிக்கும் அபாயம் குறித்து தனது கவலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். மனிதக் குலமே இதுபோல ஏஐ காரணமாக அழியும் பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20% வரை உள்ளதாக ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரிக்கிறார்.
இந்த அபாயத்தைக் குறைக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேவையான நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார். குறிப்பாக ஏஐ அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜெஃப்ரி ஹிண்டன் வலியுறுத்துகிறார்.
மனித குலத்தை அழிக்கும்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற ஏஐ தொழிற்துறை மாநாட்டில் கலந்து கொண்ட ஹிண்டன், "ஏஐ கருவிகளை நமது கட்டுப்பாட்டில் இல்லை. அவை நம்மை விட மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும். ஒரு கட்டத்தில் மனிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ள எல்லாவற்றையும் செய்யும். எதிர்காலத்தில் ஏஐ அமைப்புகள் மனிதர்களை ஈஸியாக ஏமாற்றிவிடும். இது ஒரு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல நம்மையும் ஏமாற்றிவிடும்" என்றார்.
பகீர் ஆய்வு
சமீபத்தில் ஏஐ குறித்து நடந்த ஆய்வுகளிலும் இவர் சொன்னது போலவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது ஏஐ டூல்கள் தங்கள் இலக்குகளை அடைய ஏமாற்றுதல், மோசடி செய்தல் மற்றும் திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. உதாரணமாக, ஒரு AI மாடல் மெயிலில் இருந்த தனிப்பட்ட தகவல்களைப் படித்து, அந்த ஊழியரின் கள்ள உறவை வீட்டில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறது. இத்தையைச் சூழலில் ஏஐ காட் பாதராக அறியப்படும் ஹிண்டனின் எச்சரிக்கையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஒரே தீர்வு என்ன
ஹிண்டன் மேலும் கூறுகையில், "ஏஐ டூல்கள்களுக்கு தாய்மை உணர்வுகளைப் புகுத்த வேண்டும். இதன் மூலம் அவை மனித அறிவை விஞ்சினாலும், மனிதர்கள் மீது உண்மையான அக்கறை செலுத்தும்.
AI அமைப்புகள் அதீதப் புத்திசாலியாக இருக்கும்போது அவரை மிக விரைவில் இரு முக்கிய டார்கெட்டை தனக்கென வைத்துக் கொள்ளும். ஒன்று என்ன செய்தாவது உயிருடன் இருப்பது.. மற்றொன்று, அதீதக் கட்டுப்பாட்டைப் பெறுவது. இது நடந்தால் அது ஆபத்தாகப் போகலாம்.. எனவே, ஏஐ டூல்களுக்கு இரக்க உணர்வை வளர்ப்பது மிக முக்கியம்" என்றார்.
ஏன் முக்கியம்
இதற்குத் தாய்-சேய் உறவை ஒரு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டினார். குழந்தையாக இருக்கும்போது குறைந்த அறிவு இருக்கும்.. மேலும், தாய்க்குக் குழந்தை மீது அதீத கட்டுப்பாடு இருக்கும்.. ஆனால், ஒரு தாயின் உள்ளுணர்வுகளும் சமூக அழுத்தமும் குழந்தையைக் கவனித்துக்கொள்ள வைக்கும்.. அதேபோல ஏஐ டூல்களால் ஆபத்துகள் இருந்தாலும் அதற்கும் தாய்மை உணர்வு கொடுத்தால் ஆபத்தைக் குறைக்கலாம் என்பதே அவரது வாதமாக இருக்கிறது.
அவர் மேலும் கூறுகையில், "இதுதான் ஒரே வழி. ஏஐ டூல்கள் நம்மை பெற்றோராகக் கருதவில்லை என்றால்.. நம்மை அது அழித்துவிடும். அதிபுத்திசாலி ஏஐ டூல்களுக்கு தாய்மை உள்ளுணர்வுகள் இருந்தால் தான் அவை மனிதர்கள் உயிரிழப்பதை விரும்பாது" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications