AI-வைக்கும் பெரிய ஆப்பு..உலகளவில் 40% பேருக்கு வேலையிழப்பு.. சர்வதேச நாணய நிதியம் வார்னிங்
டெல்லி: தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 0.8 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும், அதேவேளையில் செயற்கை நுண்ணறிவால் 40 சதவீதம் வரை வேலையிழப்புகள் ஏற்படலாம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வார்னிங் செய்துள்ளார்.

டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பங்கேற்றார். ஏஐ-யின் தாக்கம் தொடர்பாக நடந்த விவாதத்தில் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பங்கேற்று பேசினார்.
அப்போது உலகளவில் ஏஐ -யின் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையிழப்புகள் பற்றி விளக்கினார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சி
ஏஐ-யின் வருகை உலக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியை கொண்டு வரும். எங்களின் ஆய்வின்படி செயற்கை நுண்ணறிவு (AI) உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை 0.8% அதிகரிக்க உதவும். அதே சமயம், வேலைவாய்ப்புச் சந்தையில் ஒரு "சுனாமி" போன்ற பேரழிவையும் ஏற்படுத்தக்கூடும்.
40% வேலைக்கு சிக்கல்
உலக அளவில் 40 சதவீத வேலைகள் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படும் என எங்களின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏஐ உலகளாவிய வளர்ச்சியை கிட்டத்தட்ட ஒரு சதவீத புள்ளிக்கு உயர்த்தும்.
கொரோனாவுக்கு முந்தைய...
சரியாக சொல்ல வேண்டும் என்றால் 0.8 சதவீதம் வரை உலகளாவிய பொருளாதாரம் உயரும். அதன்படி பார்த்தால் கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தை விட விட உலக பொருளாதாரம் வேகமாக வளரும். பொருளாதாரம் உயரும்போது அது அதிகளவில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
அதேவேளையில் ஏஐ வளர்ச்சி என்பது வேலையிழப்புகளையும் ஏற்படுத்தும். ஏஐயின் தாக்கம் ஒரு சுனாமி போல் பார்க்கிறோம். ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும்போது உலகளவில் 40 சதவீத வேலைகள் பாதிக்கப்படும்.
இந்தியாவின் இலக்கு நிறைவேறும்
அதாவது வளர்ந்து வரும் நாடுகளில் 40 சதவீதம் என்ற அளவிலும், வளர்ந்த பொருளாதார நாடுகளில் 60 சதவீத வேலைகள் ஏஐ-யால் பாதிக்கப்படும். இந்தியாவை எடுத்து கொண்டால் 2047க்குள் வளர்ந்த நாடாகி 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட 'விக்சித் பாரத்' ஆகும். இந்தியாவின் தற்போதைய இலக்கு அடையக்கூடியது தான்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
பணி நீக்கத்துக்கு நடுவே...
கடந்த ஆண்டு முதல் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் ஏஐ பயன்பாட்டால் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகிறது. அமேசான், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் இந்த லிஸ்ட்டில் உள்ளன.
இதுதவிர தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் சர்வதேச நாய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இந்த எச்சரிக்கையை செய்துள்ளார்.
நந்தன் நிலகேனி
முன்னதாக கடந்த 17 ம் தேதி ஏஐ மாநாட்டில் இன்ஃபோசிஸ் நந்தன் நிலகேனி செயற்கை நுண்ணறிவு பற்றி முக்கிய விஷயத்தை குறிப்பிட்டு இருந்தார். செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருவதால் இனி வெறும் கோடிங் எழுதுவது மட்டுமே பணியாக இருக்காது. மாறாக செயற்கை நுண்ணறிவுகளை உருவாக்கி, அதனை பயன்படுத்துவதை நோக்கி செல்ல வேண்டும்.
ஏஐ என்பது குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை போல் அடுத்தக்கட்ட தொழில்நுட்பம் என்பதாக இல்லை. உதாரணமாக ஸ்மார்ட்போன்கள் அல்லது கிளவுட் தொழில்நுட்பம் வந்தபோது நிலவிய நிலைமையை விட இது மொத்தத்தையும் மாற்றி விடுகிறது'' என்றார்.
அதேபோல் மைக்ரோசாஃப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனித் சாந்தோக், ‛‛ ஏஐ -யின் உண்மையான தாக்கம் வேலையிழப்பு அல்ல. மாறாக அது கட்டமைப்பு ரீதியிலான மாற்றம்'' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications