2026 மிக மோசமாக இருக்க போகிறது.. வேலைவாய்ப்பே இல்லாத வருடமாக உருவெடுக்கும்.. ஏஐ காட்பாதர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செயற்கை நுண்ணறிவின் (AI) பிதாமகராக அறியப்படும் கணினி விஞ்ஞானி ஜெஃப்ரி ஹிண்டன், 2026-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு இல்லாத வருடமாக உருவெடுக்கும் என எச்சரித்துள்ளார். அதாவது 2026ம் ஆண்டு உலகம் முழுக்க பலரின் வேலை போகும்.. புதிதாக வேலைகள் கிடைக்காது என்று அவர் எச்சரித்து உள்ளார்.

அதிவேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு, சிக்கலான அறிவாற்றல் சார்ந்த பணிகளை தானியங்கு முறையில் செய்வதால், பல வேலைகள் எதிர்பார்ப்பதை விட விரைவாகவே நீக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

artificial intelligence Wipro Microsoft jobs

2026-க்குள் பல, பல வேலைகள் பாதிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு இன்னும் சிறப்பாக செயல்படுவதைக் காண்போம். அது இப்போதே மிகச் சிறப்பாக உள்ளது என்று ஹிண்டன் குறிப்பிட்டார். ஏற்கெனவே பல பணிகள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவுசார் பணிகளும் இதன் தாக்கத்திற்கு உள்ளாகும் என அவர் எச்சரித்தார்.

2026 பணி நீக்கம்

ஒவ்வொரு ஏழு மாதங்களுக்கும் மேம்படும் செயற்கை நுண்ணறிவு பலரின் பணியை எடுத்துக்கொள்ளும் . ஏஐகள் நீண்ட பெரிய பணிகளை சில மணிநேரங்களில் முடித்து நிறுவன உற்பத்தித்திறனை உயர்த்துகிறது. இன்னும் சில ஆண்டுகளில், பல மாதங்கள் நீடிக்கும் மென்பொருள் பொறியியல் திட்டங்களை ஏஐ சில மணி நேரங்களில் செய்ய முடியும், அப்போது மிகக் குறைவான நபர்களே தேவைப்படுவார்கள். அதனால் பலருக்கும் பணிகள் காலியாகும். நிறுவனங்கள் குறைவான பணியாளர்களையே நியமித்து, தானியங்குமயமாக்கல் மற்றும் ஆட்குறைப்பை நாடுகின்றன, என்று அவர் எச்சரித்து உள்ளார்.

முக்கியமாக அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலான வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தங்கள் வேலையை 3 ஆண்டுகளில் பறித்துவிடும் என்று கூறுகிறார்கள். 74% பேருக்கு அடுத்த 3 வருடங்களில் வேலை போக வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புக்கு ஆபத்து?

பிளைண்ட் குழுமம் (Blind groups) நடத்திய சமீபத்திய ஆய்வில், அமெரிக்காவில் உள்ள 3,500க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் தாக்கத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். சுமார் 74% பேர், செயற்கை நுண்ணறிவு அடுத்த மூன்று ஆண்டுகளில் தங்கள் வேலையை பாதிக்கும் அல்லது பறித்துவிடும் என்று நம்புகிறார்கள். செயற்கை நுண்ணறிவு தொடர்ந்து வளர்ந்தாலும், தங்கள் வேலைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று 26% பேர் மட்டுமே நினைக்கிறார்கள்.

எப்போது இது நிகழும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

பொதுவாக, செயற்கை நுண்ணறிவு சுமார் 2.8 ஆண்டுகளில் தங்கள் பணியிடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். 16 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் உள்ளவர்கள், இது இன்னும் விரைவாக, அதாவது 2.3 ஆண்டுகளில் நடக்கலாம் என்று நினைக்கிறார்கள். புதியதாக வேலைக்கு வந்தவர்கள் சுமார் 3 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நிறுவனத்திற்கு ஏற்ப காலக்கெடு மாறுபடுகிறது:

சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce): 2.3 ஆண்டுகளில் வேலை போகும் அபாயம்.
கூகுள் (Google): 2.5 ஆண்டுகளில் வேலை போகும் அபாயம்.
மைக்ரோசாப்ட் (Microsoft): 2.6 ஆண்டுகளில் வேலை போகும் அபாயம்.
உபேர் (Uber): 3.2 ஆண்டுகளில் வேலை போகும் அபாயம்.
பேபால் (PayPal): 3.3 ஆண்டுகளில் வேலை போகும் அபாயம்.

வேலைகளில் ஏற்கனவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?

43% பேர், செயற்கை நுண்ணறிவால் தங்கள் அன்றாடப் பணிகளில் சில குறைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.
23% பேர், தங்கள் பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு குறித்து தீவிரமான பேச்சுக்கள் அல்லது கவலைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
30% பேர் எந்த மாற்றத்தையும் இன்னும் காணவில்லை என்று குறிப்பிட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+