"மனித குலம் நிச்சயம் அழியும்.." ஒரே குரலில் எச்சரித்த AI காட்பாதர் உட்பட 800+ பிரபலங்கள்.. பயங்கரம்!
சென்னை: ஏஐ தொடர்பான ஆய்வுகள் இப்போது மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. அதேநேரம் செயற்கை நுண்ணறிவில் இருக்கும் சிக்கல்களை வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்தே வருகிறார்கள். அப்படித் தான் ஏஐ காட்பாதர் என கருதப்படும் ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் ஏஐிஐ தொடர்பான ஆய்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி லெட்டர் ஒன்றை எழுதியுள்ளனர்.
இந்தக் காலத்தில் ஏஐ குறித்த ஆய்வுகள் உலகெங்கும் வேகமாக நடந்து வருகிறது. பெரு நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ தொடர்பான ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் சைலெண்டாக ஏஜிஐ குறித்த ஆய்வுகளும் ஆரம்பித்துவிட்டது. பல முக்கிய நிறுவனங்கள் சத்தமின்றி இதில் இறங்கியுள்ளன.

ஏஜிஐ ஆபத்து
இதற்கிடையே உலகின் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஏஜிஐ எனப்படும் செயற்கை பொது நுண்ணறிவு அல்லது சூப்பர் இன்டெலிஜென்ஸ் உருவாக்கத் தடை விதிக்கக் கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இந்த லெட்டரில் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், பல ஆய்வாளர்கள், அமெரிக்க அரசியல்வாதிகள், ஹாலிவுட் பிரபலங்கள் என மொத்தம் 850+ பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
குறிப்பாக ஏஐ காட்ஃபாதர்கள் என அழைக்கப்படும் நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன் மற்றும் டூரிங் விருது வென்ற யோஷுவா பெங்கியோ ஆகியோரும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். சூப்பர் இன்டெலிஜென்ஸ் பாதுகாப்பிற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் வரை, அதை உருவாக்க எந்தவொரு முயற்சியும் நடக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
800+ பிரபலங்கள்
ஃபுச்ச்ர் ஆஃப் லைஃப் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு இந்த சூப்பர் இன்டெலிஜென்ஸ் லெட்டரை வெளியிட்டுள்ளது. சுமார் 800+ பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில், "சூப்பர் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பாதுகாப்பாகவும், கட்டுப்படுத்தக்கூடிய வகையிலும் இது உருவாக்கப்படும் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்கும் வரை இந்தத் தடை இருக்க வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதக் குலமே அழியும்
எந்தவொரு கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் பல முக்கிய டெக் நிறுவனங்கள் ஏஜிஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகவும் அதைத் தடுக்கவில்லை என்றால் பொருளாதாரக் குழப்பம், சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளை இழப்பது, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், அவ்வளவு ஏன் மனிதக் குலத்தின் அழிவு போன்ற மோசமான விளைவுகள் கூட ஏற்படக்கூடும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் இணை நிறுவனர் மற்றும் AI காட்ஃபாதர்கள் தவிர, விர்ஜின் குழும நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன், இளவரசர் ஹாரி மற்றும் மேகன், போப்பின் ஏஐ ஆலோசகர் பாவ்லோ பெனண்டி, முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் என பலரும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். சூப்பர் இன்டெலிஜென்ஸில் உள்ள பிரச்சினைகள் குறித்துப் பேசப்படுவது இது முதல்முறை இல்லை என்றாலும்.. ஒரே நேரத்தில் இத்தனை பிரபலங்கள் இதில் கையெழுத்திட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
AGI என்றால் என்ன
AGI என்பது ஏஐயின் அடுத்த கட்டம் எனச் சொல்லலாம். பொதுவாக ஏஐ என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லுநராக இருக்கும். உதாரணமாக ஒரு ஏஐ டூலை நாம் செஸ் விளையாட டிரைன் செய்தால்.. அது உலகின் தலைசிறந்த செஸ் வீரரைக் கூட தோற்கடிக்கும். ஆனால், அதைத் தாண்டி அந்த ஏஐ டூலுக்கு எதுவும் தெரியாது. காரை கட்டுப்படுத்தி ஓட்டச் சொன்னாலோ அல்லது சிக்கலான புதிய செயலைச் செய்யச் சொன்னாலோ அது திணறிவிடும். ஆனால், ஏஜிஐ அப்படி இல்லை.. எந்தவொரு புதிய விஷயமாக இருந்தாலும் அதை மனிதரைப் போல கற்றுக் கொண்டு செய்து காட்டும்.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏஐ நாம் கொடுத்த டேட்டாவில் மட்டுமே வல்லுநராக இருக்கும். ஆனால், ஏஜிஐ அந்த டேட்டாவுக்கு வெளியே கூட தானாக நிபுணத்துவம் பெறும்! இதுவே பிரச்சினை என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.. மனிதர்களை அழிப்பது நல்லது என ஏஜிஐ நினைத்து அதற்கான நடவடிக்கையை எடுத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்பதே அவர்கள் எச்சரிக்கையாக இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications