பங்குச்சந்தை முதலீட்டை AI உடன் இணைத்த பெங்களூர் இளைஞர்.. அடுத்த நொடி காத்திருந்த சர்ப்ரைஸ்
பெங்களூர்: நீங்கள் பங்குச்சந்தையில் செய்த முதலீட்டை ஏஐ உடன் இணைத்தால் எப்படி இருக்கும்? இந்தக் காலத்தில் ஏஐ வேகமாக வளர்ந்து வரும் நிலையில், முதலீட்டுத் துறையிலும் ஏஐ பங்களிப்பு வரும் காலங்களில் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இதற்கிடையே தனது ஷேர் போர்ட்போலியாவை AI அமைப்புடன் இளைஞர் ஒருவர் இணைத்துள்ள நிலையில், அது சர்ப்ரைஸ் முடிவுகளைக் கொடுத்திருக்கிறது.
இப்போது இளைஞர்கள் பலரும் தங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இதன் மூலம் கணிசமான அளவுக்கு லாபம் பார்க்கலாம் என அவர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையே பெங்களூருவைச் சேர்ந்த பங்கஜ் என்பவர் ஜாலியாக செய்த ஒரு காரியம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஏஐ உடன் இணைத்த இளைஞர்
அதாவது அவர் தனது வீட்டின் பெட் ரூம் விளக்குகள், பங்குச் சந்தை நிலவரத்திற்கேற்ப நிறம் மாற்றும் விதமாக ஒரு புதிய AI அமைப்பை உருவாக்கியுள்ளார். இதற்காக அவர் வீட்டின் பெட் ரூம் விளக்குகளைத் தனது ஜிரோதா கணக்குடன் இணைத்துள்ளார். அதன்படி பங்குச் சந்தையில் லாபம், நஷ்டத்தைப் பொறுத்து அதன் கலர் மாறுமாம்.
அதாவது அவருடைய ஜிரோதா போர்ட்ஃபோலியோ லாபத்தில் இருக்கும்போது விளக்குகள் பச்சை நிறத்திலும், நஷ்டத்தில் இருக்கும்போது சிவப்பு நிறத்திலும் மாறுகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு முறையும் கணக்கை லாகின் செய்யாமலேயே அவரது போர்ட்ஃபோலியோ லாபத்தில் இருக்கிறதா.. இல்லை நஷ்டத்தில் இருக்கிறதா என்பதை அவர் தெரிந்து கொள்ள முடியும்.
கலர் மாறும்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "எனது ஜிரோதா பங்குப் போர்ட்ஃபோலியோ எனது பெட் ரூம் லைட் உடன் இணைத்துள்ளேன். இப்போது அதுதான் இந்த விளக்குகளைக் கட்டுப்படுத்துகிறது. பணம் இழந்தால் சிவப்பு நிறமாக மாறும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், தனது பெட் ரூம் விளக்குகளின் போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதற்காக பங்கஜ் ராஸ்பெர்ரி பை என்ற கருவியைப் பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் தனது ஜிரோதா கணக்குகளையும் பெட் ரூம் லைட்டையும் இணைத்திருக்கிறார்.. ஜிரோதாவின் 'கைட் கனெக்ட் API' மூலம் ரியல் டைம் போர்ட்ஃபோலியோ தகவல்களை இந்த சிஸ்டம் பெறுகிறது. போர்ட்ஃபோலியோவில் இழப்பு ஏற்படும்போது விளக்குகள் சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன. லாபத்தில் இருக்கும்போது அவை நார்மலாக இருக்கிறது.
நெட்டிசன்கள்
அவரது இந்த வினோதமான கண்டுபிடிப்பு ட்விட்டர் மற்றும் ரெடிட் போன்ற சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஜிரோதாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்தே பங்கஜின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்துள்ளது. அந்தளவுக்கு இவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பல முதலீட்டாளர்கள் இவரைப் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இதை நீங்கள் விற்கலாம்.. பலரும் இதை வாங்க ரெடியாக இருப்பார்கள். நானே கூட வாங்கத் தயாராக இருக்கிறேன்" என்று வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "நான் இந்த மாதிரி செட்அப் வைத்திருந்தால் எனது வீடே சிகப்பு நிறத்தில் மாறிப் போய் இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
ஜிரோதா
ஜிரோதா என்பது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பங்கு புரோக்கங் நிறுவனங்களில் ஒன்றாகும். ஜிரோதாவை கடந்த 2010ல் நிதின் காமத் ஆரம்பித்தார். அப்போது பங்குச்சந்தை முதலீடுகள் என்பது சிக்கலாகும் சாதாரண நபர்களுக்கு எட்டாத ஒன்றாகவும் இருந்தது. அதை மாற்றி முதலீடுகளை அனைவருக்கும் எடுத்துச் சென்ற நிறுவனங்களில் ஜிரோதா முக்கியமானது. மிக குறைந்த புரோக்கிங் கட்டணம், ஃபியூச்சர்கள், ஆப்ஷன்கள் என அனைத்தையும் எளிமையாகக் கொண்டு வந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications