சாட்ஜிபிடி, ஜெமினி, க்ராக்! எல்லா AI மாடல்களிலும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல்! போட்டு உடைத்த பிரபலம்
சியாட்டில்: ஏஐ நிறுவனங்கள் இப்போது படுவேகமாக வளர்ந்து வரும் சூழலில், அனைத்து ஏஐ நிறுவனங்களிலும் மிக முக்கியமான பிரச்சினை இருப்பதாகப் பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையைச் சரி செய்யும் ஏஐ நிறுவனங்களே எதிர்காலத்தில் வெற்றிகரமானதாக இருக்கும் என்றும் லாரி எலிசன் கூறியுள்ளார்.
ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். எல்லாத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் சீராக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் இது தொடர்பாகச் சில முக்கியமான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

பெரிய சிக்கல்
அதாவது இணையத்தில் பொதுவெளியில் கிடைக்கும் டேட்டாவை வைத்தே அனைத்து ஏஐ ஏஜெண்டுகளும் பயிற்றுவிக்கப்படுவதாகவும் இதனால் அனைத்து ஏஐ நிறுவனங்களும் ஒரே மாதிரி மாறிவருவதாகவும் ஆரக்கிளின் லாரி எலிசன் தெரிவித்துள்ளார். ஜெமினி தொடங்கி, சாட்ஜிபிடி, க்ராக் என அனைத்துமே ஒரே பப்ளிக் டேட்டாவையே பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இணையத்தில் கிடைக்கும் இந்த டேட்டாவை வைத்தே அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஏஐ டூல்களுக்கு பயிற்சி அளிக்கிறதாம்.!
எதிர்காலத்தில் எந்தவொரு நிறுவனம் பிரைவேட் டேட்டாவை பயன்படுத்துகிறதோ.. அந்த நிறுவனமே எதிர்காலத்தில் வெற்றியைப் பெறும் என்றும் லாரி எலிசன் கூறியுள்ளார். இதற்கு தேவையான திட்டங்களில் ஆரக்கிள் முதலீடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.. டேட்டாவில் ஆரக்கிளின் இந்த ஆதிக்கம் அடுத்த AI அலையில் அதன் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்!
லாரி எலிசன்
2026 நிதியாண்டின் 2வது காலாண்டின் முடிவுகள் வெயீடு நிகழ்ச்சியில் லாரி எலிசன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். இப்படி சாட்ஜிபிடி முதல் ஜெமினி, மெட்டாவின் லாமா வரை, அனைத்து பெரிய AI மாடல்களும் அடிப்படையில் ஒரே டேட்டாவை வைத்தே பயிற்சி அளிக்கப்படுவதால் அனைத்தும் ஒரே மாதிரி மாறி வருவதாகவும், ஏஐ மாடல்களுக்கு இடையேயான வேறுபாடுகள் வேகமாகக் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாருக்கு லாபம்
இதனால் AI துறையில் ஏற்படும் அடுத்த அலை என்பது சிறந்த மாடல்களை உருவாக்குவது தொடர்பாக இருக்காது. மாறாக, பிரைவேட் டேட்டாவை வைத்து எந்த ஏஐ மாடல் பயிற்சி பெறுகிறதோ அந்த மாடலை வெல்லும் என்று அவர் தெரிவித்தார். AIஇன் இந்த இரண்டாம் அலை, தற்போதுள்ள GPU மற்றும் டேட்டா மையத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் மிகப் பெரியதாகவும், அதிக மதிப்பு மிக்கதாகவும் இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.
அதாவது ஏஐ துறையில் எதிர்காலம் என்பது டேட்டா சார்ந்தே இருக்கும். மற்ற ஏஐ நிறுவனங்களிடம் இல்லாத டேட்டாவை வைத்து எந்தவொரு ஏஐ மாடல் பயிற்சி பெறுகிறதோ, அதுவே வெற்றிகரமாக இருக்கும். அப்படிப் பிரத்தியேக டேட்டா வேண்டும் என்றால் டேட்டா சென்டர்களில் முதலீடுகள் அதிகரிக்கும். அதுவே எதிர்காலமாக இருக்கும் என்பது லாரி எலிசனின் கருத்து!
ஆரக்கிள் முதலீடு
இதை அடிப்படையாக வைத்தே ஆரக்கிள் பெரும் முதலீடு செய்து வருகிறது. இதற்காகச் சுமார் $50 பில்லியன் முதலீடு செய்யவுள்ளது.. Retrieval-Augmented Generation போன்ற தொழில்நுட்பத்தைத் தனது ஏஐ மாடல் பயன்படுத்தும் என்றும் இதனால், பாதுகாப்பு சமரசங்கள் இல்லாமல் ரியல் டைமில் பிரைவேட் தகவல்களைத் தங்கள் ஏஐ மாடல் அணுகும் என ஆரக்கிள் தெரிவித்துள்ளது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications