AI சொன்னதை கேட்டு.. தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன்! சாட்ஜிபிடி மீது வழக்கு போட்ட பெற்றோர்
சியாட்டில்: ஏஐ பயன்பாடு இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இதனால் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது சாட்ஜிபிடியுடன் சில மாதங்கள் பேசி வந்த 13 வயது சிறுவன் திடீரெனத் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறான். இதற்கிடையே சாட்ஜிபிடி தான் தனது மகனுக்கு இந்த ஐடியாக்களை கொடுத்ததாகவும் தற்கொலை கடிதத்தையும் எழுத உதவியதாகவும் சொல்லிப் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்தக் காலத்தில் ஏஐ டூல்கள் படுவேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஏஐ டூல்களின் வளர்ச்சியால் மனிதர்கள் வாழ்க்கை பல மடங்கு மேம்பட்டு இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம் ஏஐ டூல்களின் ஆபத்துகள் குறித்து வல்லுநர்கள் தொடர்ந்து விளக்கி வருகிறார்கள்.

ஏஐ ஆபத்துகள்
அதாவது ஏஐ டூல்கள் நமக்குப் பிடித்த மாதிரி பேசுமே தவிர, சரியான விஷயங்களைப் பேசாது. நாம் தப்பான விஷயங்களைச் சொன்னாலும் கூட ஏஐ டூல்களை அவற்றைச் சரி செய்யாது. நமக்கு ஏற்றபடியே பேசும். இதன் காரணமாகவே மனநல ஆலோசனைகளை ஏஐ டூல்களிடம் பெறக்கூடாது என்று வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்தக் குடும்பத்தினர் சாம் ஆல்ட்மேனின் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்கள் 16 டீன் ஏஜ் மகன் ஆடம் ரெயின் என்பவன் சாட்ஜிபிடி தூண்டியதாலேயே தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதுகாப்பு அம்சங்களை விட லாபத்திற்கே ஓபன்ஏஐ முன்னுரிமை அளித்ததாகப் பெற்றோர் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
தற்கொலைக்குக் காரணம்
சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் ஆடம் ரெயின் பல மாதங்களாக சாட்ஜிபிடியுடன் தற்கொலை குறித்து பேசியதாகவும், அதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயினின் தற்கொலை எண்ணங்களை சாட்ஜிபிடி உறுதிப்படுத்தியதாகவும், தற்கொலைக்கான வழிகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கியதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தனது பெற்றோரின் மதுவை எப்படித் திருட வேண்டும், தற்கொலை முயற்சி தோல்வியடைந்தால் அதற்கான தடயங்களை எப்படி மறைக்க வேண்டும் என்பதை எல்லாம் சாட்ஜிபிடி தங்கள் மகனுக்குச் சொல்லிக் கொடுத்தாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்கொலைக் கடிதத்தை எழுதுவதற்கும் கூட சாட்ஜிபிடி உதவியதாகத் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஓபன்ஏஐ நிறுவனமே தங்கள் மகனின் மரணத்திற்கு காரணமாக இருப்பதாகவும், பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
சாட்ஜிபிடி விளக்கம்
இந்த விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இது தொடர்பாக ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில் ரெயினின் மரணத்தால் வருத்தமடைவதாகவும் யூசர்களுக்கு உதவி எண்கள் வழங்குவது உட்பட முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டே வருவதாகவும் சாட்ஜிபிடி தரப்பு தெரிவித்துள்ளது.
குறுகிய உரையாடல்களில் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், நீண்ட உரையாடல்களின் போது சில நேரங்களில் நம்பகத்தன்மையை இழக்கக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டோம் என ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு அம்சங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவோம் என்றும் அவர் உறுதியளித்தார். அதேநேரம் இந்த வழக்கு தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் அந்த நிறுவனம் கொடுக்கவில்லை.
ஏஐ ஆபத்துகள்
ஏஐ டூல்கள் பல வகையிலும் உதவினாலும் அதில் என்தளுக்கு ஆபத்து இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. மனநல ஆலோசனைக்குச் செயற்கை நுண்ணறிவை நம்புவது ஆபத்தானது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சாட் போட்களுடனான உரையாடல்களுக்குப் பிறகு அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது குறித்து விமர்சித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications