சென்னையில் ஏஐ மூலம் குப்பை சேகரிக்கும் பணி.. தனியார் நிறுவனம் அசத்தல் ஏற்பாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், குப்பைகளை சுத்தம் செய்ய AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது ஒரு தனியார் நிறுவனம்.

சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணிகள் அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும், நிலையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் குப்பை சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Corporation Sanitation Work AI Technology to Be Used for Garbage Cleaning

சென்னையில் குப்பை சேகரிப்பு தனியார் மயமாக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பேட்டரி வாகனங்கள், IoT, GPS, RFID மூலம் குப்பை மேலாண்மை பணிகள், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகரில் குப்பை சேகரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இந்நிலையில், தனியார் நிறுவனம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்க உள்ளது. தனியார் நிறுவனம் பேட்டரி வாகனங்களை நேரடி கண்காணிப்பு மூலம் இயக்க உள்ளது. குப்பை சேகரிக்கும் வண்டிகள், கடற்கரையை சுத்தம் செய்யும் இயந்திரம் மற்றும் குப்பையை அள்ளும் இயந்திரம் அனைத்தும் சென்சார்கள் மூலம் இணைக்கப்படும். இதன்மூலம் குப்பை சேகரிப்பை நேரடியாக கண்காணிக்க முடியும்.

மக்களுக்காக ஒரு செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அனைத்துமே டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுவதால், எங்கு தவறு நடந்தாலும் உடனுக்குடன் அதனைத் தீர்க்க முடியும், AI வசதியுடன் எங்கு எவ்வளவு குப்பை சேகரமாகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+