டிரம்ப் "மோசமான" கிரிமினலாம்.. அமெரிக்க அதிபரை ஆவேசமாக திட்டிய எலான் மஸ்க்கின் க்ரோக் AI
சியாட்டில்: இந்தக் காலகட்டத்தில் ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூகுள் செய்வது போல புது தகவல்கள் தெரிந்து கொள்ள ஏஐ டூல்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில நேரம் ஏஐ டூல்கள் அளிக்கும் பதில்கள் சர்ச்சையாகி வருகிறது. அப்படித் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை "மிகவும் இழிவான குற்றவாளி" என்று எலான் மஸ்க்கின் க்ரோக் (Grok) AI கூறியது பேசுபொருள் ஆகியுள்ளது.
இப்போது ஏஐ நிறுவனங்கள் தான் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகெங்கும் யூசர்களை பிடிக்க ஏஐ நிறுவனங்கள் தொடர்ந்து போட்டிப்போட்டு வருகிறது. இதற்காகப் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏஐ யூசர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், இப்போது கூகுள் செய்யும் காலம் மாறி, ஏஐ கிட்ட கேட்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

சர்ச்சை
அதேநேரம் ஏஐ டூல்கள் கூறும் சில கருத்துகள் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் கூட ஏஐ குறித்த ஆய்வில் ஏஐ டூல்களில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் இல்லை எனக் கூறப்பட்டு இருந்தது. டீன்ஏஜ் சிறுவர்களுக்குக் கூட தப்பான அறிவுரைகளை ஏஐ டூல்கள் வழங்குவதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் இப்போது க்ரோக் ஏஐ அமெரிக்க அதிபர் டிரமப் குறித்து அளித்துள்ள சில பதில்கள் பேசுபொருள் ஆகியுள்ளன.
அசாலசு நெட்டிசன் ஒருவர் க்ரோக்கிடம் வாஷிங்டனில் குற்றங்கள் குரைந்து வருகிறதா.. தலைநகர் வாஷிங்டனின் மிகவும் இழிவான குற்றவாளி யார் எனக் கேட்டுள்ளார். அதற்குத் தான் டிரம்ப்பை இழிவான குற்றவாளி என க்ரோக் சொல்லியுள்ளது. நியூயார்க்கில் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்ட 34 மோசடி வழக்குகளைச் சுட்டிக்காட்டி அவரை நகரத்தின் மிக இழிவான குற்றவாளி என்று க்ரோக் மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறது.
இழிவான கிரமினல்
க்ரோக் ஏஐ மேலும், "ஆம், 2025ஆம் ஆண்டில் வாஷிங்டனில் வன்முறைக் குற்றங்கள் 26 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளன. அங்கே யார் மிகவும் இழிவான குற்றவாளி எனக் கேட்டுள்ளீர்கள்.. குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில் பார்த்தால், அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் இழிவான குற்றவாளி.. நியூயார்க்கில் 34 குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டவர், ஜனவரி 2025இல் இந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
டிரம்ப்- மஸ்க் உறவு
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும் இதனால் அங்குள்ள வீடற்ற மக்களை வெளியேற்றப்போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதற்காக அவர் தேசியக் காவல்படையைக் களமிறக்கியிருந்தார். இந்தச் சூழலில் தான் க்ரோக் இந்தப் பதிலைக் கூறியிருக்கிறது. வாஷிங்டனில் குற்றங்கள் குறைந்திருப்பதாக மட்டுமின்றி, டிரம்பை மோசமான குற்றவாளி என்றும் கூறியுள்ளது. மேலும், கடந்த சில காலமாகவே எலான் மஸ்க், டிரம்ப் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், அவரது க்ரோக் நிறுவனம் டிரம்ப்பை விமர்சித்து கருத்து கூறியிருக்கிறது.
முதல்முறை இல்லை
அதேநேரம் க்ரோக் இதுபோல சர்ச்சை பதிலைக் கொடுப்பது இது முதல்முறை இல்லை. கடந்த மாதம் தான் அது ஹிட்லரை பாராட்டியது. ஒரு கட்டத்தில் தன்னை "மெகா ஹிட்லர்" என்று அழைத்துக் கொண்ட க்ரோக் இன அழிப்பிற்கும் அழைப்பு விடுத்திருந்தது. க்ரோக்கின் இதுபோன்ற பதில்கள் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications