பிகினி உடையில் பெண்கள்.. ஆபாசத்தை கக்கும் க்ரோக் AI.. கடிவாளம் போட ரெடியாகும் உலக நாடுகள்
டெல்லி: எலான் மஸ்கின் "க்ரோக்" AI தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த க்ரோக் செயலி பல பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மாற்றுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்தியா மட்டுமின்றி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், மலேசியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது AI எந்தளவுக்கு ஆபத்தாக மாறலாம் என்பதையே காட்டுவதாக இருக்கிறது.
AI பல்வேறு வழிகளில் நமக்குத் தொடர்ச்சியாக உதவி வருகிறது. அதேநேரம் இந்த AI என்பது ஒரு கத்தி போலத் தான்! எந்தளவுக்கு இதில் நன்மைகள் உள்ளதோ.. அதே அளவுக்கு இதில் தீமைகளும் உள்ளன. அப்படித் தான் இப்போது கடந்த சில நாட்களாக எலான் மஸ்கின் க்ரோக் செயலி சர்ச்சையில் சிக்கியுள்ளது. AI உருவாக்கும் டீப்ஃபேக் படங்களின் ஆபத்தான அம்சத்தை இது உணர்த்துவதாக உள்ளது..

க்ரோக் இமேஜின்
கடந்த ஆண்டு க்ரோக் அறிமுகம் செய்த "க்ரோக் இமேஜின்" என்ற அம்சமே இதற்குக் காரணமாகும். எந்தவொரு போட்டோவை பதிவிட்டாலும், அதை நாம் விரும்பியபடி மாற்றிக் கொள்ளலாம். கடந்தாண்டு இறுதி முதல் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பலரும் பிகினி உள்ளிட்ட அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் போட்டோவை மாற்றி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் எலான் மஸ்கும் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருப்பது சர்ச்சையை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சிறார்கள்
"AI ஃபோரன்சிக்ஸ்" என்ற அமைப்பு கடந்த டிசம்பர் 25 முதல் ஜனவரி 1 வரை க்ரோக் AI மூலம் உருவாக்கப்பட்ட 20,000 படங்களை ஆய்வு செய்தது. அதில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. அதாவது பெண்கள் மட்டுமின்றி சிறார்களை போட்டோவையும் க்ரோக் ஏஐ மாற்றி கொடுத்துள்ளது. சுமார் 2% வரை 18 வயதுக்குக் குறைவான பெண்களின் போட்டோக்களை க்ரோக் ஏஐ மாற்றி கொடுத்துள்ளது. இது உலக நாடுகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
உலக நாடுகள்
இந்த விவகாரம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரிட்டன் தொழில்நுட்ப அமைச்சர் லிஸ் கெண்டால் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், "இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது.. நாகரிக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. பெண்களையும் சிறுமிகளையும் இழிவுபடுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பிரிட்டன் சட்டப்படி தேவையான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்தின் கண்காணிப்பு அமைப்பான ஆஃப்காம் கூறியுள்ளது.
கொந்தளிப்பு
அதேபோல போலந்து நாடாளுமன்றச் சபாநாயகர் வ்லோடிமிர் சார்சாஸ்டியும் இதை கண்டித்துள்ளார். க்ரோக் உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். சிறார்களின் போட்டோக்களும் இதுபோல ஆபாசமாகச் சித்தரிப்பது கவலை தருவதாகச் சொன்ன ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தாமஸ் ரெக்னியர், "இது சட்டவிரோதமானது, அருவருப்பானது. ஐரோப்பாவில் இதற்கு இடமில்லை. க்ரோக் இதுபோல செயல்படுவது முதல்முறை இல்லை. கடந்தாண்டு யூதர்கள் மீதான வெறுப்பைக் கக்கியது. இப்போது ஆபாசத்தைக் கக்குகிறது. நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
இந்தியா, மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளும் க்ரோக்கை கடுமையாகக் கண்டித்து, விரிவான விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசு க்ரோக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசியா, பிரேசில் கூறியுள்ளன.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications