AI போட்டோவால்.. கையில் காயம் என HR-யை ஏமாற்றி சம்பளத்துடன் விடுமுறை எடுத்த ஊழியர்! புதுசா இருக்கே
சென்னை: தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கையில் காயமடைந்தது போல் ஏஐ உதவியுடன் போட்டோ உருவாக்கினார். அதன்பிறகு அந்த போட்டோவை எச்ஆருக்கு அனுப்பி சம்பளத்துடன் கூடிய விடுமுறையை பெற்றது தொடர்பாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக செல்போன்களில் பல ஏஐ செயலிகள் வந்துவிட்டன. இந்த செயலிகளை பயன்படுத்தி நாம் விரும்பிய போட்டோக்களை டவுன்லோட் செய்ய முடியும். அதுமட்டுமின்றி ஒருவரின் போட்டோவை எப்படி வேண்டுமானாலும் ‛பிராம்ட்' கொடுத்து ‛எடிட்' செய்யலாம்.

இந்த ஏஐ தொழில்நுட்பம் என்பது கிரியேட்டிவிட்டிக்கான போட்டோ, வீடியோக்களை உருவாக்க உதவும் அதேவேளையில் சட்டவிரோதமான நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஏஐ செயலியை பயன்படுத்தி ஊழியர் தனது கையில் காயம் ஏற்பட்டதாக கூறி எச்ஆரை ஏமாற்றி சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தனியார் நிறுவனத்தில் இளைஞர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் கூகுள் நேனோ பனனா ஏஐ இமேஜ் ஜெனரேட்டர் எனும் ஏஐ-யை பயன்படுத்தி எச்ஆரை ஏமாற்ற முடிவு செய்தார். இதையடுத்து அவர் கூகுள் ஏஐ-யை ஓபன் செய்தார்.
அதில் தனது கையின் போட்டோவை பதிவிட்டார். அதன்பிறகு அந்த கையின் நடுப்பகுதியில் காயம் இருப்பது போல் வேண்டும் என்று ‛பிராம்ட்' செய்தார். இதையடுத்து கூகுள் ஏஐ-யும் தத்ரூபமாக கையின் நடுப்பகுதியில் காயம் இருப்பது போல் போட்டோவை உருவாக்கி கொடுத்தது.
இதையடுத்து அந்த போட்டோவை அந்த ஊழியர் தனது எச்ஆருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். அதில், ‛‛ஹாய் பூஜா (எச்ஆர்), ஆபிசுக்கு வந்தபோது பைக்கில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தேன். நான் இன்று டாக்டரை பார்த்து பேண்டேஜ் போட வேண்டி உள்ளது. இதனால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.. ப்ளீஸ்'' என்று மெசேஜ் அனுப்பினார்.
AI just broke HR verification.
— kapilansh (@kapilansh_twt) November 28, 2025
An employee took a clean photo of his hand — no injury, nothing.
He opened Gemini Nano and typed:
“apply an injury on my hand.”
In seconds, AI generated a hyper-realistic wound:
sharp, detailed, medically believable.
He sent it to HR saying he… pic.twitter.com/wZw9zk1Wva
அதற்கு எச்ஆர், ‛‛ப்ளீஸ்.. ஸ்ட்ரெஸ் ஆக வேண்டாம். விஷாலுடன் பேசிவிட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன்'' என்று கூறினார். அதற்கு ஊழியர், ‛‛கண்டிப்பாக பூஜா, நான் இப்போது டாக்டரிடம் செல்ல வேண்டும்'' என்றார்.
இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில், ‛‛ஹே ரோகித், கவலை வேண்டாம். தயவு செய்து டாக்டரிடம் சென்று வாருங்கள். விஷால் சாரிடம் பேசிவிட்டேன். சம்பளத்துடன் கூடிய உங்களின் விடுமுறைக்கு ஒப்புதல் கிடைத்து விட்டது. கவனமாக ரெஸ்ட் எடுங்கள்'' என கூறியுள்ளார்.
இப்படியாக ஏஐ போட்டோவை பயன்படுத்தி ஊழியர் கையில் போலியான காயத்தை உருவாக்கி தான் பணியாற்றும் நிறுவனத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வாங்கி உள்ளார். ஊழியரின் இந்த மோசடி தொடர்பான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் அந்த ஊழியர் எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்? என்பது பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும் இந்த மோசடி என்பது எச்ஆர் மட்டுமின்றி அனைத்து தனியார் நிறுவனங்களுக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் பலரும் இப்படியான மோசடியை கையில் எடுக்கலாம் என்பதால் விடுமுறையை அப்ரூவல் செய்யும் பணியில் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications