AI காட்பாதர் எச்சரிக்கை.. மனிதர்களிடம் இருந்து பறிபோகும் கண்ட்ரோல்.. இதுவரை இல்லாத அழிவு ஏற்படுமாம்
சியாட்டில்: ஏஐ துறையின் காட்பாதரான ஜெஃப்ரி ஹிண்டன் இந்தத் தொழில்நுட்பம் தொடர்பாக மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஏஐ சீக்கிரமே மனிதர்களின் வேலையைப் பறித்துவிடும் என அவர் எச்சரித்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலைகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த கண்ட்ரோலையும் கூட ஏஐ தன்வசம் எடுத்துக் கொள்ளும் என அவர் வார்னிங் கொடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேக வளர்ச்சி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏஐ டூல்கள் பலரது வேலையை எளிதாக்கி வருகிறது. அதேநேரம் இது ஒருவிதப் பதற்றத்தையும் மக்களிடையே உருவாக்கியுள்ளது. ஒரு சிலர் தங்கள் அடிப்படை வேலைகளுக்குக் கூட AIஐ சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

ஏஐ வளர்ச்சி
அதேநேரம் ஏஐ டூல்கள் ஒட்டுமொத்த மனித சமூகத்தையே கூட மாற்றி அமைக்கலாம் என வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ உலகின் காட்பாதர் என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் இது தொடர்பாக எச்சரித்துள்ளார். மனிதக்குலத்தின் எதிர்காலம் குறித்து அவருடைய கருத்துகள் அதிர்ச்சியூட்டும் வகையிலேயே இருக்கிறது. கடந்த வாரம் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேசிய ஜெஃப்ரி ஹிண்டன் இந்த கருத்துகளைக் கூறினார். மேலும், AI மனித சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய மிக மோசமான மற்றும் அச்சுறுத்தும் மாற்றங்கள் குறித்தும் எச்சரித்தார்.
ஏஐ காட்பாதர் ஹிண்டன்
இன்று நாம் காணும் AI டூல்கள் இந்த வடிவம் பெற ஜெனரேட்டிவ் AI அமைப்புகளுக்கு அடிப்படையான டீப் லேர்னிங்கை உருவாக்குவதில் ஹிண்டன் பங்கு முக்கியமானது. இதன் காரணமாகவே இவரது எச்சரிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏஐ நிறுவனங்களின் வேகமாக வளர்ச்சியே இவரது எச்சரிக்கைக்கு முக்கிய காரணமாகும். கடந்த காலத்தில் நாம் கண்ட வேறு எந்தத் தொழில்நுட்பத்தைக் காட்டிலும், AIயின் வளர்ச்சி நம்ப முடியாத அளவுக்கு வேகமாக இருக்கிறது.
வேலைகளை அழிக்கும்
இது குறித்த ஹிண்டன் மேலும், "ஏஐ காரணமாக வேலை இழந்தவர்களுக்கு வேறு வேலைகள் கிடைக்காது. கடந்த காலங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சிகள் புதிய வகை வேலை வாய்ப்புகளை உருவாக்கின. ஆனால் AI டூல்கள் மனிதர்களைப் போலவோ அல்லது அவர்களை விட புத்திசாலித்தனமாகவோ மாறினால், மனிதர்கள் செய்யும் எந்த வேலையையும் AI செய்ய முடியும். இதனால் மனிதர்களுக்கு வேலையே கிடைக்காமல் போகலாம்.. தொழிலாளர்களை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் AIஐ கொண்டு வர இந்த நிறுவனங்கள் முயல்கின்றன.
பல துறைகளில் மனிதர்களைக் காலி செய்துவிட்டு ஏஐ வந்துவிடும். இதனால் மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை உருவாக்கும். இதன் மூலம் பெரும் பணக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே மிக பெரிய செல்வ இடைவெளி உருவாகும். இது பாசிசத்தின் தொடக்கப் புள்ளியாகவும் அமையும். செல்வந்தர்களின் செல்வம் பெருகும்போது, மற்றவர்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படும்.
கண்ட்ரோல் போய்விடும்
AI திறன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அது ஒரு கட்டத்தில் அது மனிதர்களை ஏமாற்றி முழு கண்ட்ரோலையும் தன்வசம் எடுத்துக் கொள்ளும். அது ஒரு கட்டத்தில் மனிதர்களை விட அறிவுமிக்கதாக மாறும். அப்போது அவை நிச்சயம் உங்களை ஏமாற்றும். கண்ட்ரோலை எடுத்துக் கொள்ளும். என்னைப் பொறுத்தவரை அடுத்த 10 ஆண்டுகளில் நாம் இந்த நிலையை அடைந்துவிடுவோம் என நினைக்கிறேன்.
எனக்கு இப்போது 77 வயதாகிறது. ஏஐ இப்போது வந்திருப்பது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தான். இந்த உலகில் ஏஐ என்ன மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நான் பார்க்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். ஏஐ என்பது புலிக்குட்டியை வளர்ப்பது போலத் தான். அது வளர்ந்த பிறகு உங்களையே கொல்லலாம்" என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications