அமெரிக்காவில் அடித்த AI புயல்.. இந்தியாவில் பாதிப்பு ரொம்பவே மோசம்.. ஐரோப்பாவும் கூட தப்பல!

Subscribe to Oneindia Tamil

மும்பை: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் ஒரே ஒரு டூலை அறிமுகப்படுத்தியிருந்தது. அது குறித்த அறிவிப்பு வந்தவுடனேயே அது இந்திய ஐடி நிறுவனங்களைத் திணறடித்துவிட்டது. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பியா மற்றும் அமெரிக்க ஐடி நிறுவனங்களையும் அந்த ஒரு அறிவிப்பு கலங்கடித்துவிட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஏஐ வளர்ச்சியால் வேலையிழப்பு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இந்த வளர்ச்சியால் ஐடி துறைகளில் தான் வேலையிழப்பு அதிகம் இருக்கும் என ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இதனால் பலரும் அச்சத்திலேயே உள்ளனர். அந்தப் பயம் உண்மையாகிவிடும் போல.. நேற்றைய தினம் பிரபல அமெரிக்க ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் அறிமுகப்படுத்திய ஒரு வகை டூல் காரணமாக இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் மிகப் பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.

Heavy pressure for Indian IT companies after a sinle AI tool from Anthropic What really happened

இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி ஐரோப்பியச் சட்ட மென்பொருள் நிறுவனங்கள், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தகவல் தொழில்நுட்பப் பங்குகளுக்கும் கூட கடும் சரிவைச் சந்தித்தது.

புயலை இறக்கிய ஆந்த்ரோபிக்

ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புதிய AI கருவியால் கன்டிராக்ட் செக், ஒப்பந்த மறு ஆய்வுகள், சட்டச் சுருக்கங்கள் மற்றும் வழக்கமான வரைவுப் பணிகள் போன்ற அன்றாடச் சட்ட நடவடிக்கைகளைக் கையாள முடியும். இது அந்நிறுவனத்தின் AI உதவியாளரான க்ளாடின் (Claude) ஒரு பகுதியாகும். மேலும், இது எந்தவொரு நிறுவனத்தின் சட்டக் குழுக்களுக்கும் ஒரு பிளக் இன் போலச் செயல்படுகிறது. அதேநேரம் இந்த பிளக்இன் சட்ட ஆலோசனை வழங்குவதில்லை என்றும், AI உருவாக்கும் எந்தவொரு கன்டென்ட்டையும் பயன்படுத்துவதற்கு முன் வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியது.

ஐரோப்பியா அரண்டு போச்சு

இருப்பினும், இதுபோன்ற கருவிகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சட்ட ஆய்வு மென்பொருள் மற்றும் ஐடி சர்வீஸ் தேவையைக் குறைக்கக்கூடும் என்ற கவலை முதலீட்டாளர்களிடையே நிலவியது. இந்த அச்சமே பங்குச்சந்தைகளில் எதிரொலித்துள்ளது.. இந்த அப்பேட் வந்தவுடனேயே ஐரோப்பியாவில் பிரபல டெக் நிறுவனங்களின் பங்கு விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஏஐ டூல்களால் டாக்குமென்ட் ரிவ்யூ, டேட்டா ஹேண்டலிங் ஆகியவற்றையும் செய்ய முடியும். வழக்கமாக இதுபோன்ற வேலைகள் தான் இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்வார்கள். இந்த வேலைகளுக்கு முழுமையாக ஏஐ வந்துவிட்டால் அது இந்திய ஐடி நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதன் காரணமாகவே இந்தியப் பங்குச்சந்தை கடுமையாகச் சரிந்தது.

இந்தியாவிலும் சிக்கல்

இன்று காலை முதலே இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ போன்ற முன்னணி இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவைச் சந்தித்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை விற்க ஆரம்பித்ததால் இந்த நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் பங்குகள் விலை 7% வரை சரிந்தன. ஒட்டுமொத்தமாகவே இந்தியப் பங்குச்சந்தைகளில் இது எதிரொலித்தது.

அதேபோல அமெரிக்காவிலும் சட்ட ஆய்வு மற்றும் மென்பொருள் சேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தாம்சன், லீகல்ஜூம், மற்றும் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ் க்ரூப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 12 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தன. பேபால், எக்ஸ்பீடியா குழுமம், இபாம் சிஸ்டம்ஸ், ஈக்விஃபாக்ஸ் மற்றும் இன்ட்யூட் போன்ற நிறுவனங்களும் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டன.

எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஏஐ வளர்ச்சியால் எந்தத் துறை பாதிக்கும்.. எந்தத் துறை தப்பும் எனத் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் ஏஐ வளர்ச்சியால் பாதிக்கலாம் எனத் தகவல் வந்தாலே அந்தத் துறையை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக அணுகுவதாக பி ரைலி வெல்த் மேனேஜ்மென்ட்டின் சந்தை நிபுணர் ஆர்ட் ஹோகன் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்தார். இதன் காரணமாகவே இந்திய ஐடி நிறுவனங்கள் இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+