"கோடிங் அழிந்து போகும்.. அதில் சந்தேகமே வேண்டாம்!" ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த AI வல்லுநர்
சென்னை: இந்தக் காலத்தில் ஏஐ படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் ஏஐ அலையில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே கோடிங் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பமே பெரிய சிக்கலில் இருப்பதாக க்ளாட் ஏஐயின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் டாரியோ அமோடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஏஐ தொடர்பாகவும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி தொடர்பாகவும் க்ளாட் ஏஐயின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் டாரியோ அமோடி சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். அதாவது பெரும்பாலானோர் நினைப்பதைக் காட்டிலும் கிட்டத்தட்ட ஏஐ வேகமாக மனிதர்களின் திறனை நோக்கி முன்னேறி வருவதாகவும் எதிர்காலச் சவால்களுக்குச் சமூகம் தயாராக இல்லை என்றும் டாரியோ அமோடி தெரிவித்துள்ளார்.

ஏஐ
செரோதா இணை நிறுவனர் நிகில் காமத்தின் நிகழ்ச்சியில் பேசிய அமோடி, தற்போதைய AIயின் வளர்ச்சியைத் தொலைதூரத்தில் ஒரு பெரிய அலை திரள்வதைக் கடற்கரையில் நின்று பார்ப்பது போன்றது என ஒப்பிட்டார். இந்த மாற்றம் தொழில்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விப் பாதைகளையே முழுமையாக மறுவடிவமாக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இன்றைய இளைஞர்கள் தொழிலைத் தேர்வு செய்ய மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். முதலில் செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக இல்லாமல், அதனுடன் இணைந்து பிஸ்னஸை கட்டமைக்க வேண்டும். இரண்டாவதாக அதன் விநியோகச் சங்கிலி முதுகெலும்புடன் தொடர்புடைய துறைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பேக்ட் செக் என்பது கடினமாக மாறும் இந்த காலகட்டத்தில் விமர்சனங்களை ஏற்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கேள்விகள்
ஏஐ வளர்ச்சியால் எந்தத் தொழில்கள் முதலில் பாதிக்கப்படும்.. எந்தத் தொழில்கள் நீண்டகால வாய்ப்புகளைக் கொண்டுள்ளன மற்றும் இந்த காலகட்டத்தில் எதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் 25 வயதில் இருக்கும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்.. எதைச் செய்தால் வெற்றிகரமாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் மிகத் தெளிவாக, "மனிதனை மையமாகக் கொண்டு சிந்தியுங்கள். மனிதர்கள் தேவைப்படும் பணிகள், மக்களுடன் உறவாடும் பணிகள் பற்றி யோசிக்க வேண்டும். தனிநபர் புரிதல் மற்றும் நிஜ உலக அனுபவத்துடன் தொடர்புடைய வேலைகள் தான் தாக்குப்பிடிக்கும். வெறும் தொழில்நுட்பப் பணிகளை காட்டிலும் இவை மேம்பட்டதாக இருக்கும்.
கோடிங் மாறும்
கோடிங் எழுதுவது தான் முதலில் மாறப் போகிறது. கோடிங் எழுதும் முறையே மாறும். அல்லது ஏஐ மாடல்களை அதைச் செய்ய ஆரம்பிக்கும். அடிப்படை கோடிங் முதலில் ஆடோமேட் ஆகும். அட்வான்ஸ்டு கோடிங் கூட ஆடோமெஷனை நோக்கிச் செல்லும். ஆனால், அதற்கு அதிகக் கால அவகாசம் ஆகும். ஆனால், எதுவாக இருந்தாலும் அது நடந்துவிடும். எப்போது நடக்கும்.. நமக்கு எவ்வளவு டைம் இருக்கிறது என்பது மட்டுமே கேள்வியாக இருக்கிறது.
லாபம் தான்
ஏஐ உடன் நான் இயங்கும்போது நமக்கு சில அட்வான்டேஜ் ஏற்படும். ஏனென்றால் நீங்கள் உங்கள் டாஸ்கில் ஐந்து சதவீதத்தை மட்டுமே செய்ய வேண்டி இருக்கும். மற்றவற்றை ஏஐ செய்துவிடும். எனவே நீங்கள் 20 மடங்கு அதிக உற்பத்தித்திறன் கொண்டவராக மாறுகிறீர்கள். செயற்கை நுண்ணறிவு செய்யும் வேலைகள் 95 சதவீதத்திலிருந்து 99 சதவீதமாக அதிகரிக்கும்போது மனிதனின் பங்கு இன்னும் சுருங்கலாம். இதனால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பது உண்மை என்றாலும் இதனால் ஏற்படும் நன்மைகளே அதிகம்!
செயற்கை நுண்ணறிவு வேகமாக அதிகரித்து வருகிறது. கல்வி அமைப்புகள் முதல் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் அதற்கேற்ப மாறவில்லை. AI அலை வலுப்பெறும்போது, தங்களைப் புத்திசாலித்தனமாக நிலைநிறுத்திக் கொண்டவர்கள் அதை வழிநடத்த முடியும். இல்லையென்றால் யாராலும் தாக்குப்பிடிக்க முடியாது" என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications