வயிற்றுக்குள் நுழையும் AI.. பசி எடுத்தாலே போதும்! அடுத்த நொடி வீடு தேடி வரும் உணவு! பயங்கரமா இருக்கே
பெங்களூர்: இந்த காலத்தில் ஏஐ பயன்பாடு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நமக்கு வயிறு பசிக்கும்போது தானாக டெலிவரி செயலியில் உணவு ஆர்டர் செய்யும் ஒரு வித்தியாசமான கருவியைக் கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக அவரது வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
உலகில் இப்போது ஏஐ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. பல்வேறு துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த ஏஐ டூல்களை வைத்து இளைஞர்கள் பல புதிய வினோதமான மேட்டர்களையும் முயன்று வருகிறார்கள்.

வினோதமான ஏஐ
அப்படி இளைஞர் ஒருவர் செய்த செயல் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சோஹன் எம். ராய் என்பவர் வயிறு பசிக்கும்போது, அதை உணர்ந்து தானாக உணவு ஆர்டர் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை உருவாக்கியதாகச் சொல்லி ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
மங்களூருவைச் சேர்ந்த இந்த இளைஞர், பசி எடுக்கும் போது தானாகவே உணவை ஆர்டர் செய்யும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் தளத்திலும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எப்படி வேலை செய்யும்
அந்த வீடியோவில் அவர், "நான் பசியாக இருக்கும்போது அதைப் புரிந்து கொண்டு ஜொமேட்டோவில் தானாகவே உணவை ஆர்டர் செய்யும் இந்த சாதனத்தை நான் கண்டுபிடித்தேன்" என்று கூறுகிறார். இந்தக் கருவியை அவர் தனது பெல்ட்டில் இணைத்துக் கொள்கிறார். அது அவரது வயிற்றில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டறிந்து உணவை ஆர்டர் செய்யுமாம்.
இந்தக் கருவி எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கிய அவர், "இந்த கருவியின் பெயர் Meal Ordering Module.. வயிறு பசிக்கும்போது, நமக்கு ஒருவித சத்தம் கேட்கும் அல்லவா.. அந்த சத்தத்தைக் கண்டறிந்து இது தானாகவே உணவை ஆர்டர் செய்கிறது. அதாவது சத்தத்தை உணர்ந்து உணவை ஆர்டர் செய்யும்" எனப் பதிவிட்டுள்ளார்.
கிளாட் AI
இதற்காக அவர் தனது சகோதரியின் ஸ்டெதாஸ்கோப் உட்பட பல பாகங்களை வைத்து இந்த கருவியை உருவாக்கியுள்ளார். சோஹன் ராயின் இந்த கருவி, கிளாட் AI (Claude AI) உதவியுடன் இயங்குகிறது. சும்மா சத்தம் கேட்டவுடன் உணவை ஆர்டர் செய்யாது. மாறாக எந்தளவுக்குச் சத்தம் கேட்கிறதோ.. அதை வைத்து ஒருவர் எந்தளவுக்குப் பசியில் இருக்கிறார் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ற உணவுகளை ஆர்டர் செய்யுமாம்.. இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
யார் இவர்!
கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சோஹன் எம். ராய்.. இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். சஹ்யாத்ரி பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை பெற்ற இவர், தனது சொந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். கடந்த 2023ல் இப்படி தான் ஜொமெட்டோவில் டெவிரி ஏஜெண்டாக சேர்ந்த இவர், தனது சொந்த ட்ரோன் மூலம் உணவுகளை டெலிவரி செய்து டிரெண்டானார்..
-
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
மனிதர்களை மிஞ்சும் AI? தனக்குத்தானே வாரிசை உருவாக்குதாம்.. மிக அருகே வந்துவிட்டது பேரழிவு! -
ஐஆர்சிடிசி கேண்டீன்களில் ஏஐ கேமரா.. ரயில்களில் உணவு சாப்பிடுபவர்கள் அறிய வேண்டியவை -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications