பலர் வேலை இழக்க போகிறார்கள்.. எல்லாம் மாறப்போகிறது.. ரிச் டாட் புவர் டாட் புத்தக ஆசிரியர் எச்சரிக்கை
சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக பல அறிவாளிகள், சாமர்த்தியமானவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று ராபர்ட் கியோசாகி எச்சரித்துள்ளார். AI தொழில்நுட்பம், ஒரு காலத்தில் சிறப்பானதாக, பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பல வேலைகளை தானியங்கி மயமாக்குவதால் வேலையின்மை அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
வேலை மார்க்கெட்டில் உலகளவில் மிகப்பெரிய வீழ்ச்சி நடக்க போவதாக ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
கல்விக் கடனும் வேலை இழப்பும்
கல்லூரியில் படித்து கல்விக் கடன் சுமையுடன் இருக்கும் மாணவர்கள், குறிப்பாக சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள், பாரம்பரியமான வழியில் வேலை தேடி பெறுவது சாத்தியம் இல்லை. பலருக்கு வேலை கிடைக்காது. ஏற்கனவே வேலை உள்ள பலர் அதை இழக்க நேரிடும். பலருக்கும் இப்போது வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை எண்ணி கியோசாகி கவலை தெரிவித்துள்ளார். வேலைக்குச் செல்வதை விட தொழில் முனைவோராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது சிறந்தது என்பது அவரது நம்பிக்கை.

கியோசாகி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழக்கமான பாதையை கேள்விக்குள்ளாக்கி வருகிறார். பள்ளிக்குச் சென்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று, வேலை வாங்கி, பணம் சேமிப்பது போன்ற பழைய முறையை பயன்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது. அதை வைத்து இப்போது நிதி பாதுகாப்பை உறுதி செய்யாது.. வேலை மார்க்கெட்டில் உலகளவில் மிகப்பெரிய வீழ்ச்சி நடக்க போவதாக ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்..
செயற்கை நுண்ணறிவு ஆபத்து
ஏற்கனவே ஏஐ வருகை காரணமாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), துறையில் அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) தாக்கம் அதிகரித்து வருவதால், வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் புதுமையின் பிறப்பிடமாகவும், நிலையான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் இருந்த தொழில்நுட்பத் துறை, தற்போது செயற்கை நுண்ணறிவால் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. திறமையான நிபுணர்களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்து வருவதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர்.
வேலை இழப்புக்குக் காரணமான செயற்கை நுண்ணறிவு
ஃபியூச்சரிஸம் (Futurism) ஊடகத்தின் அறிக்கையின்படி, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, திறமையான நிபுணர்கள் செய்து வந்த வேலைகளை தானியங்கி முறையில் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), மற்றும் கிரியேட்டிவ் துறைகளில் (Creative sectors) கூட, குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கும் அல்காரிதம்கள் (Algorithms) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அந்த துறைகளில் அதிக அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளன..












Click it and Unblock the Notifications