Gen Zக்கு தான் ஜாக்பாட்.. AI பல கோடி சம்பளத்தை அள்ளி கொடுக்கும்.. சாட்ஜிபிடி ஓனர் குட் நியூஸ்
சியாட்டில்: AI வருகைக்குப் பிறகு வேலைவாய்ப்பு சந்தை மொத்தமாக மாறி வருகிறது. இதற்கிடையே அடுத்த 10 ஆண்டுகளில் ஒருவரது கேரியர் என்பதையே AI மொத்தமாக மாற்றி அமைக்கும் என சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். அதிகச் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற போதிலும் அதற்கு முன்பு மிக பெரிய வேலையிழப்பு நடக்கும் என அவர் தெரிவித்தார்.
AI வந்த பிறகு சர்வதேச வேலைவாய்ப்பு சந்தை மொத்தமாக மாறி வருகிறது. பல்வேறு நிறுவனங்களிலும் வேலையிழப்புகளும் கணிசமாக ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே வேலைவாய்ப்புகள் எப்படி மாறும் என்பது தொடர்பாக சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

கேரியர் என்பதே மாறிடும்
அதாவது அடுத்த 10 ஆண்டுகளில் ஒருவரது கேரியர் என்பதையே AI மொத்தமாக மாற்றி அமைக்கும் என சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். இருப்பினும், தொடக்கத்தில் இதனால் மிகப் பெரிய வேலையிழப்பு ஏற்படலாம் என்றும் அதன் பிறகே மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "2030களின் நடுப்பகுதியில் இன்றைய மாணவர்கள் முற்றிலும் புதிய, அதிக ஊதியம் பெறும் தொழில்களில் ஈடுபடலாம் என்று ஒரு எதிர்காலத்தைச் சித்தரித்தார். அதேசமயம், செயற்கை நுண்ணறிவு பல பாரம்பரிய வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக ஒழிக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
பல மடங்கு அதிக சம்பளம்
தொழில் தொடங்குவோருக்கு மிகவும் உற்சாகம் தரும் ஒரு காலகட்டம் வரப்போகிறது. எனது பார்வையில் 2035ல் பட்டம் பெறும் ஒரு மாணவர் இப்போதிருக்கும் வேலைவாய்ப்பு மார்கெட்டிற்குள் நுழையவே மாட்டார். அவர் கார்ப்பரேட் வேலைக்கு விண்ணப்பித்து மெல்ல புரமோஷன் அடைந்து உயர்நிலைக்குப் போவது என்பதே நடக்காமல் போகலாம்.. அதற்குப் பதிலாக இன்று அரிதாகவே இருக்கும் துறைகள் அப்போது மிகப் பெரியளவில் வளர்ந்து இருக்கும். அதில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். தற்போது கிடைக்கும் சம்பளத்தை விடப் பல மடங்கு அதிகச் சம்பவமும் அவர்களுக்குக் கிடைக்கும்.
விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.. அதாவது படித்து முடித்து பட்டம் பெற்றவர்கள் உடனே சூரிய மண்டலத்தை ஆராயும் மிஷனில் அனுப்பப்படலாம்.. இந்த வேலைகள் முக்கியமானதாக இருக்கும். மேலும், அசாதாரண அளவுக்கு அதிக ஊதியத்தையும் வழங்கும். இப்போது மனிதர்கள் செய்யும் பல வேலைகளை AI செய்ய ஆரம்பித்த பிறகே இதுபோன்ற புதிய துறைகள் உருவாகும்" என்றார்.
வேலைகள் பறிபோகும்
அதேநேரம் அவரது பேச்சில் ஒரு தெளிவான எச்சரிக்கையும் உள்ளது. அதாவது இந்த மாற்றம் சீராக இருக்காது என்பதை ஆல்ட்மேன் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். அதிக ஊதியம் தரும் வேலைகள் உருவானாலும் கூட அதற்கு முன்பு வேலைவாய்ப்பு சந்தையை AI மொத்தமாக மாற்றி அமைக்கும் என்பதை அவர் வெளிப்படையாகவே சொல்கிறார். திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய அல்லது கணிக்கக்கூடிய வேலைகள் நிச்சயம் மறைந்துபோகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Gen Z இளைஞர்கள்
இந்த நேரத்தில் வேலைச் சந்தையில் நுழையும் Gen Z இளைஞர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என சாம் ஆல்ட்மேன் கூறினார். ஏனெனில் அவர்கள் இந்த மாற்றத்தின் தொடக்கத்திலேயே வேலைச் சந்தையில் நுழைகிறார்கள். AI கருவிகள் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் மாறும்போது, அதைத் துல்லியமாகப் பயன்படுத்திக் கொள்ள இவர்கள் சரியான நிலையில் இருப்பார்கள் என்பது ஆல்ட்மேன் கருத்து!
-
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications