"ஜனநாயகத்திற்கே ஆபத்தானது!" AI குறித்து ஒரே குரலில் வந்த எச்சரிக்கை.. 1000+ அமேசான் ஊழியர்கள் கடிதம்
சியாட்டில்: இந்தக் காலத்தில் ஏஐ பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இதற்கிடையே ஏஐ பயன்பாடு கானமாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனச் சொல்லி அமேசான் நிறுவனத்தில் இருந்து சுமார் 1000+ ஊழியர்கள் அதன் தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏஐ இப்போது படுவேகமாக வளர்ந்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அனைத்துத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. இது மனிதர்களின் வாழ்க்கையைப் பல்வேறு வழிகளிலும் எளிமையானதாக மாற்றுகிறது. அதேநேரம் உரிய சோதனை இல்லாமல் வேகமாக இதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும்போது அதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாகப் பலரும் எச்சரித்து வருகிறார்கள்.

அமேசான்
இதற்கிடையே அமேசான் நிறுவனத்தில் வேலை செய்யும் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தின் அதிவேகப் பயன்பாட்டுக்கு எதிராகத் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸிவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். AI தொழில்நுட்பத்தை அமேசான் மிக வேகமாகப் பயன்படுத்துவதாகவும், இது ஜனநாயகம், வேலைவாய்ப்புகள் மற்றும் பூமியைப் பாதிப்பதாகவும் ஊழியர்கள் அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக அந்தக் கடிதத்தில் மேலும், "இவ்வளவு வேகமாக AI தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். AI தொழில்நுட்பத்தை இந்தளவுக்கு வேகமாக அமல்படுத்தும்போது அது ஜனநாயகம், எங்கள் வேலைகள் மற்றும் பூமிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம்
அமேசான் நிறுவனம் ஏஐ நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே சமீபத்தில் அமேசான் நிறுவனம் மிக பெரியளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்திருந்தது. அந்த அறிவிப்பு வந்து சில வாரங்களில் இந்தக் கடிதம் வந்துள்ளது. அமேசான் மட்டுமின்றி மைக்ரோசாஃப்ட், கூகுள், மெட்டா உள்ளிட்ட ஊழியர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பத்தை வேகமாக அமேசான் அமல்படுத்தும் சூழலில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பதை அமேசான் கண்டுகொள்ளவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2040-க்குள் ஜீரோ கார்ன் நெட் எமிஷன் என்ற இலக்கை அடைவேன் என சொன்னாலும் அமேசான் கார்பன் எமிஷன் 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் 35% அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
ஊழியர்களை எளிதாக தூக்கி எறிய புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் அமேசான் அதிகம் முதலீடு செய்வதாகவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அமேசானின் AI டூல்கள் மற்றும் சர்வீஸ்கள் ஆகியவை வன்முறை, அதீத கண்காணிப்பிற்கு வழிவகுக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது அதில் மேலும், "இவை அனைத்தும் சவாலானவை தான்.. ஆனால் செய்யவே முடியாதவை அல்ல. சிறந்த எதிர்காலத்திற்கு இவை நிச்சயம் தேவைப்படும்" என கூறப்பட்டுள்ளது.
உரிமைகள் தேவை
இது தொடர்பாக அமேசான் நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமேசான் உருவாக்கும் டேட்டா சென்டர்களுக்கு மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து மட்டுமே வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ காரணமாக ஊழியர்களைக் குறைப்பதற்குப் பதிலாக ஊழியர்களுக்கு உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications