வாயை கூட திறக்க வேண்டாம்! மனதில் யோசித்தாலே கூட கண்டுபிடித்து சொல்லும் நவீன AI.. எங்க போய் முடியுமோ!
சியாட்டில்: சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் இப்போது ரகசியமாக ஒரு கருவியை உருவாக்கி வருகிறதாம். அந்த கருவி தொடர்பாக சாம் ஆல்ட்மேன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதாவது ஏஐ கருவிகளுக்கு ஒருவரை பற்றிய அனைத்து தகவலும் தெரியும் என்றும் எதிர்காலத்தையே புரட்டிப்போடுவதாக இருக்கும் என்றும் ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது டூல் தான் சாட்ஜிபிடி.. அந்த நிறுவனத்தின் வெற்றியே பல ஏஐ நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. இதற்கிடையே சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ இப்போது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டது.

சாட்ஜிபிடி
இதுவரை ஓபன் ஏஐ நிறுவனத்திற்குத் தனியாக ஹார்டுவேர் கருவிகள் எதுவும் இல்லை. சாப்ட்வேராக மட்டுமே இருக்கிறது. செல்போன் அல்லது கம்ப்யூட்டர் மூலமாகவே இப்போது சாட் ஜிபிடியை நம்மால் பயன்படுத்த முடிகிறது. இதை மாற்றி தனக்கென ஒரு ஹார்டுவேர் கருவியை உருவாக்க வேண்டும் என்பதில் ஓபன்ஏஐ தெளிவாக இருக்கிறது. இதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
புதிய கருவி
இதற்காகத் தான் இந்தாண்டு தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் ஜோனி ஐவ் உருவாக்கிய "io" என்ற டிசைன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 6.5 பில்லியன் டாலர் கொடுத்து ஓபன் ஏஐ வாங்கியது. அப்போது முதலே ஜோனி ஐவ் ஒரு புதிய ஏஐ -ஹார்டுவேர் கருவியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சாம் ஆல்ட்மேன் மற்றும் ஜோனி ஐவ் இருவரும் இந்த புதிய கருவி குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த புதிய கருவி ஐபோனை விட எளிமையானதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எளிமையாக இருக்கும்
இது தொடர்பாக ஆல்ட்மேன் கூறுகையில், "ஐபோன் என்பது மிகவும் எளிமையான ஒரு சாதனம். அது டெக் வடிவமைப்புகளில் ஒரு மகுடம் என்றே சொல்லலாம். நான் மிகவும் விரும்பி மற்றும் அதிகம் பயன்படுத்தும் கருவி ஐபோன் தான். எங்கள் புதிய கருவி அதை விடவும் எளிமையாக இருக்கும்" என்றார்.
அது சரி, சாம் ஆல்ட்மேன் ஒரு எளிய ஏஐ கருவியை விரும்புவது ஏன் என்ற கேள்வி நமக்கு வரும். தங்கள் கருவிகள் நவீன செல்போன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என ஆல்ட்மேன் விரும்புகிறார். தற்போது சந்தையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஏகப்பட்ட நோட்டிபிகேஷன் இடைவிடாமல் வரும். அப்படி இருக்கக்கூடாது.. மிகவும் எளிமையாகவும் எளிமையாகவும் தங்கள் கருவி இருக்க வேண்டும் என்பதே ஆல்ட்மேன் திட்டம்.
செல்போன்கள்
அவர் மேலும் கூறுகையில், "நவீன செல்போன்கள் குழப்பத்தையே தருகிறது. எங்கள் கருவி அதை மாற்றும். இது மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால், நீங்கள் நினைத்துக் கூட பார்க்காத பல வேலைகளை அது செய்யும்" என்றார். அதாவது ஏஐ கருவி மிக எளிமையாக இருக்குமாம்.. இதன் மூலம் மக்கள் அதை யூஸ் செய்கிறார்கள் என்றே உணராமலேயே அவர்கள் அதை பயன்படுத்துவார்கள் என்கிறார்கள்.
நினைப்பதைக் கூட சொல்லும்
இந்த கருவி மூலம் செயற்கை நுண்ணறிவு அனைத்து பணிகளையும் செய்யும் என்று ஆல்ட்மேன் கூறுகிறார்.. அவர்கள் மேலும் கூறுகையில், "நீங்கள் நினைத்து நினைத்த, படித்த, பேசிய எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு கருவி வேண்டும் என்பதே இதன் நோக்கம்.. அதாவது இந்த ஏஐ கருவிக்கு உங்களைப் பற்றி எல்லாமே தெரிந்திருக்கும்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications