தட்டித் தூக்குது தமிழக அரசு.. ரூ.10,000 கோடியில் வருது ’AI’ பூங்கா! சென்னையின் கலரே மாறப் போகுது!
சென்னை: உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும் அந்தப் போட்டியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அதற்கான முக்கிய அடையாளமாக, சென்னை தரமணியில் ரூ.10,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு (AI) பூங்கா அமைக்கப்பட உள்ளது. சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா அருகே அமைக்கப்பட உள்ள இந்த தன்னாட்சி AI பூங்கா, தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட முன்னணி நாடுகள் ஏற்கனவே AI தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடுகளை செய்து வரும் நிலையில், தமிழ்நாடும் அதே பாதையில் தன்னிச்சையான AI கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டு மண்ணுக்கும், தமிழ்மொழிக்கும் ஏற்றவாறு வடிவமைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த AI பூங்கா அமைப்பதற்காக, பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட 'சர்வம்' (Sarvam) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு ஏஐ பூங்கா
இதன் மூலம், தற்போது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிலைமையில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் மையத்திற்கே நேரடியாக நுழையக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, தமிழக மக்களின் தரவுகள் அனைத்தும் மாநிலத்திற்குள் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும். வெளிநாட்டு நிறுவனங்களின் சர்வர்களை சார்ந்திருக்கும் நிலை குறையும் என்பதால், தரவு பாதுகாப்பு தொடர்பான கவலைகளும் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தரமணி ஏஐ பூங்கா
AI பூங்கா உருவானால், அதன் பலன்கள் கல்வி, மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல துறைகளிலும் பரவலாகத் தெரியும். மாணவர்களுக்கு பல மொழிகளில் உள்ள பாடப்பொருள்கள் எளிதாக தமிழில் விளக்கப்படும். விவசாயிகளுக்குத் தமிழில் புரியும் வகையில் பயிர் ஆலோசனைகள், சந்தை தகவல்கள் வழங்கப்படும். மருத்துவத் துறையில், நோய் அறிகுறிகள் மற்றும் அடிப்படை ஆலோசனைகள் மக்களுக்குப் புரியும் தமிழில் கிடைக்கும் சூழல் உருவாகும்.
தமிழுக்கான ஏஐ தொழில்நுட்பம்
மேலும், தமிழின் இலக்கணம், வட்டார வழக்குச் சொற்கள், கலாச்சார நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய AI மாதிரிகள் உருவாக்கப்பட உள்ளதால், அரசு அலுவலகங்களில் கோப்பு மேலாண்மை உள்ளிட்ட பணிகளும் எளிமையடையும் என கூறப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு பூங்கா, தமிழ்நாட்டை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாநிலமாக மட்டுமல்லாமல், உலகத்திற்கே AI தீர்வுகளை வழங்கும் மையமாக மாற்றும் திறன் கொண்டதாக அரசியல் மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்கள் சொல்கின்றன.
தமிழக ஐடி வளர்ச்சி
ஏற்கனவே தமிழக அரசு தொழில்நுட்ப துறையில் அதிக முதலீடு செய்து வருகிறது. தமிழக அரசு சார்பில் ஐடி பூங்காக்கள், நியோ டைடல் பார்க், மினி டைடல் பார்க் போன்றவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசின் பத்தரவு பதிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் 50க்கும் மேற்பட்ட சேவைகளை வாட்ஸாப் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அந்த தொழில் சேவைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை தொகுத்தும் வகையில் இந்த ஏஐ முக்கிய பங்கு வைக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் அரசின் சேவைகள் மக்களுக்கு வேகமாகவும் துல்லியமாகவும் கிடைக்கும் என்கின்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications