நிலவில் AI சர்வர்! எலான் மஸ்க் திட்டம்! வேகமெடுக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி
வாஷிங்டன்: செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இதற்கான டேட்டா சென்டர்களை பூமியில் வைப்பதைவிட நிலவில், விண்வெளியில் வைக்கவே எலான் மஸ்க் போன்ற ஜாம்பவான்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இதை கேட்க அறிவியல் கற்பனை கதை போன்று இருக்கலாம். ஆனால் இன்றைய டெக் உலகம் இதை நோக்கிதான் போய்க்கொண்டிருக்கிறது.
இன்று நாம் பயன்படுத்தும் OpenAI, Gemini, Deepseek போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், Google Drive, Microsoft OneDrive, Dropbox போன்ற கிளவுட் சேவைகள், அனைத்து முக்கிய இணையதளங்கள், மின் வணிகத் தளங்கள், வங்கிச் சேவைகள் மற்றும் மொபைல் செயலிகள் ஆகியவை செயல்பட, Facebook, Instagram, YouTube போன்ற தளங்கள் இயங்க என டிஜிட்டல் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் டேட்டா சென்டர்கள் அவசியம்.

எலான் மஸ்க், சுந்தர் பிச்சையின் பிளான்
ஆனால், பூமியில் மின்சாரக் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதும், புதிய உள்கட்டமைப்புகளுக்கு அரசு அமைப்புகள் அனுமதி வழங்குவதில் தாமதப்படுத்துவதும் இவர்களை விண்வெளியை நோக்கி உந்தி தள்ளியிருக்கிறது. அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான ஆற்றலை வழங்க, விண்வெளியில், சந்திரனில், பெரிய தரவு மையங்களை உருவாக்க வேண்டும் என்று ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க், சுந்தர் பிச்சை போன்ற டெக் ஜாம்பவான்கள் யோசித்து வருகிறார்கள்.
விண்வெளியில் புதிய யுகம்
நிலவு நமக்கு இந்த பிரபஞ்சம் கொடுத்த மிகப்பெரிய பரிசு என்று அமேசான், ப்ளூ ஆரிஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கூறியிருக்கிறார். நிலவின் மேற்பரப்பை தொழில் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ப்ளூ ஆரிஜின் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் விண்வெளிப் பயணச் செலவைக் குறைக்க முயற்சிக்கின்றன. கூகிள் 'ப்ராஜெக்ட் சன்கேட்சர்' என்ற புதிய கணினி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது நிலவில் அமையவுள்ள கணினி திட்டமாகும். என்விடியா மற்றும் ஸ்டார்கிளவுட் போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்வெளி சார்ந்த ஜி.பி.யுகளை(GPUs) ஆய்வு செய்து வருகின்றன.
சூரிய சக்தியின் பயன்பாடு
சூரிய சக்தியால் இயங்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் உதவியுடன் விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு சர்வர்களை நிறுவுவதற்கான திட்டங்களை மஸ்க் வகுத்து வருகிறார். இதெல்லாம் விண்வெளியில் டேட்டா சென்டர்கள் உருவாக ரொம்ப காலம் ஆகாது என்பதை உணர்த்துகிறது.
டேட்டா சென்டர்களை உருவாக்குவது மிகுந்த செலவு பிடித்த வேலை. அப்படி இருக்கையில் விண்வெளியில் டேட்டா சென்டர்களை உருவாக்குவது எப்படி சாத்தியம்? இதற்கு நிறைய பணம் செலவாகாதா? என்று கேள்வி இயல்பாக எழலாம்.
செலவை குறைக்கவும் திட்டம்
உண்மைதான் இன்றைய தேதியில் இது எக்கச்சக்க செலவு பிடித்த வேலையாக தோன்றலாம். ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் இந்த நிலைமை மாறலாம் என்று நாசாவின் முன்னாள் விஞ்ஞானியும், மத்திய புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியருமான பில் மெட்ஸ்ஜர் கூறியிருக்கிறார்.
விண்வெளியில் சூரிய வெப்பம் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே சூரிய ஒளி தொடர்ச்சியாக கிடைக்கிறது. அங்கே இரவு இல்லை, மேகங்கள், புயல்கள் அல்லது வானிலை இடையூறுகள் இல்லை. இதனால் மின்சார தடை ஏற்படவே செய்யாது.
பூமியில் டேட்டா சென்டர்களை குளிர்வித்துக்கொண்டே இருக்க வேண்டும். விண்வெளியில் இயற்கையாகவே குளிர் இருப்பதால் இதற்கான செலவு மிச்சம். மட்டுமல்லாது பூமியில் அரசாங்க அனுமதி பெறுவதை போல விண்வெளியில் யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவேதான் விண்வெளியில் டேட்டா சென்டர்களை அமைத்து அதன் மூலம் AI சர்வர்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
-
இனி உலகை ஆளப்போவது 'மாங்கா' நிறுவனங்கள் தான்.. மிக முக்கியமான மாற்றம்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
62 வயது.. ஸ்கிராச்சில் இருந்து துவங்கும் ஜெப் பெசோஸ்.. அதென்னப்பா Prometheus! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
ஐடி மேனேஜர்களுக்கு வேட்டு வைக்கும் AI.. கான்டெக்ஸ்ட் இன்ஜினியரிங் தொழில்நுட்பம்.. CTS செய்த புரட்சி! -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி












Click it and Unblock the Notifications