"இந்திய மார்கெட்!" அம்பானி போட்ட அதே திட்டத்தை கையில் எடுத்த AI நிறுவனங்கள்! இவ்வளவு மேட்டர் இருக்கா
சென்னை: உலகின் டாப் ஏஐ நிறுவனங்களும் கூட இந்தியாவில் தனது ப்ரீமியம் சேவையை இலவசமாக வழங்குகிறது. மற்ற நாடுகளுக்குக் கட்டணம் செலுத்தினால் கிடைக்கும் சேவை இந்தியாவுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படுவது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் கூட இதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய உலக அரசியலே இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
உலகின் டாப் ஏஐ நிறுவனங்களும் கவனிக்கும் மிக முக்கியமான மார்கெட்டாக இந்தியா உருவெடுத்துள்ளது. 90 கோடிக்கும் அதிகமான நெட் யூசர்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால்... ஓபன் ஏஐ, கூகுள் முதல் பெர்ப்ளெக்சிட்டி வரை அனைத்து பெரிய ஏஐ நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் கால்தடத்தைப் பதிக்க ஆர்வமாக உள்ளன.

ஏஐ டூல்கள்
அதற்காகவே இந்திய யூசர்களுக்கு மட்டும் ப்ரீமியம் ஏஐ டூல்களை கூட ஏஐ நிறுவனங்கள் இலவசமாக வழங்குகிறது. சாட்ஜிபிடி, ஜெமினி, பெர்ப்ளெக்சிட்டி என எல்லா ஏஐ நிறுவனங்களுமே தங்கள் ப்ரீமியம் பேக்குகளை இந்தியாவுக்கு மட்டும் இலவசமாக வழங்குகிறது. இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமான எண்ணம் எல்லாம் இதற்குக் காரணம் இல்லை.. இந்தியா சந்தையைப் பிடிப்பதற்கான நீண்ட கால உத்தி தான் இது.. முதலில் யூசர்களை அடிமையாக்கி பிறகு, அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதுதான் இதன் நோக்கமாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிருக்கும் இணைய யூசர்கள் எண்ணிக்கை ரொம்பவே பெரியது.. ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தின் மக்கள் தொகையை விட இந்தியா மக்கள் தொகை அதிகம்.. ஒவ்வொரு மாதமும் புதிய இணைய யூசர்கள் எண்ணிக்கையும் கூட தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இளம் யூசர்கள், இணையத்தை யூஸ் செய்யக்கூடியவர்கள், ஆங்கிலம் அறிந்தவர்கள் என ஏஐ வளர்ச்சிக்குத் தேவையான மார்கெட்டாக இந்தியா இருக்கிறது.
யூசர்கள்
அதாவது இந்தியர் ஒருவர் புதிய ஒரு விஷயத்தை முயலும் போது, அது யூசர்களுக்கு மட்டும் உதவுவதில்லை. ஏஐ டூல்களையும் கூட வடிவமைக்க அது உதவுகிறது. அதாவது ஏஐ டூல்களின் பயிற்சிக்கும் (training) கூட இது உதவுகிறது. ஏஐ நிறுவனங்களுக்கு இது ஒரு பொக்கிஷமான வாய்ப்பாகும். எப்படி யோசித்துப் பார்த்தாலும் புதிய ஏஐ டூல்களை சோதிக்க இந்தியா ஒரு மிகச் சிறந்த சோதனைக் களமாக இருக்கிறது. இதன் காரணமாகவே எல்லா ஏஐ டூல்களும் இந்தியர்களுக்கு மட்டும் பிரீமியம் பேக்கை இலவசமாக வழங்குகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு முதலீடு தான்!
திட்டம் என்ன
அதாவது முதலில் இந்தியர்களை இந்தக் கருவியைப் பயன்படுத்த வைக்க வேண்டும். பிறகு அவர்கள் வாழ்க்கை முறையில் இணைக்க வேண்டும். இதன் மூலம் காலப்போக்கில் ஹோம் வோர்க், ஆபீஸ் வலை என எல்லாவற்றுக்கும் ஏஐ பக்கம் வருவார்கள். ஏஐ இருந்தால் தான் இந்த வேலையைச் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகும். அதாவது இந்தத் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகத் தொடங்குகிறார்கள். அதன் பிறகே கட்டணம் வசூலிக்க ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும். அந்த நிலை வரும்போது தாங்கள் தான் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இலவச பேக்குகளை ஏஐ நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஜியோ கூட இந்தியச் சந்தையை இப்படித் தான் பிடித்தது பலருக்கும் நினைவிருக்கும். அதாவது முதலில் இலவசம் எனச் சொல்லி மார்கெட்டில் வருவார்கள். பிறகு அது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழல் உருவான உடனே கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து. அதை மெல்ல உயர்த்தவும் தொடங்குவார்கள். டெலிகாம் சந்தையில் நடந்த அதுதான் ஏஐ சந்தையிலும் நடக்கும்.
அடுத்து என்ன செய்வார்கள்
மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டார்ட் அப்கள் என அனைவருக்கும் பிரீமியம் சேவை இலவசமாகக் கிடைக்கும். கிட்டத்தட்ட தங்கள் எல்லாச் சேவைக்கும் ஏஐ டூல்களை பயன்படுத்துவார்கள். ஓரிரு ஆண்டுகளில், "இலவசம்" என்ற லேபிள் மறைந்துவிடும். அப்போது நீங்கள் உங்கள் பேக்குகளுக்கு தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.. சிலர் அப்போது யோசித்தாலும் கூட பெரும்பாலான நபர்கள் கட்டணத்தைச் செலுத்தத் தொடங்குவார்கள். டெலிகாம் முதல் கிளவுட் ஸ்டோரேஜ் வரை ஒவ்வொரு டிஜிட்டல் புரட்சியும் இப்படித்தான் நடந்துள்ளது.
"இலவசம்" என்பது எப்போதும் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு வழிதான். இந்தியாவில் மார்கெட்டை பிடித்தாலே அது எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் அதற்குக் கணிசமான வருவாயைக் கொடுக்கும். அதை நோக்கிய ஏஐ நிறுவனங்கள் இப்போது சென்று கொண்டு இருக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications