இனி சாட்ஜிபிடியில் வரும் ஆபாசம்.. திடீர் அறிவிப்பு! இனி குழந்தைகளை AI பக்கமே விடக்கூடாது போலையே
சியாட்டில்: ஏஐ துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய டூல் சாட்ஜிபிடி! இப்போது பல்வேறு தரப்பு மக்களும் ஏஐ டூல்களை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணமே இதுதான். இதற்கிடையே இந்த சாட்ஜிபிடி தனது செயலியில் ஆபாச கண்டெண்டுகளை அனுமதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது யூசர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு துறைகளிலும் இப்போது ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ இந்தளவுக்கு வளர முக்கிய காரணமே சாட்ஜிபிடி தான்.. சொல்லப் போனால் ஏஐ துறையை சாட்ஜிபிடிக்கு முன்பு, சாட்ஜிபிடிக்கு பின்பு என்றே இரண்டாகப் பிரிக்கலாம். அந்தளவுக்கு ஏஐ துறையைப் புரட்டிப்போட்டது சாட்ஜிபிடி தான். இப்போதும் உலகில் அதிக பேர் பயன்படுத்தும் ஏஐ டூல்களில் ஒன்றாக சாட்ஜிபிடி இருக்கிறது.

சாட்ஜிபிடி
இதற்கிடையே சாட்ஜிபிடி இப்போது மிக முக்கியமான ஒரு மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது. அதாவது சாட்ஜிபிடி தளத்தில் இனி வரும் காலங்களில் அடல்ட் கண்டெண்டுகள் அனுமதிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். யூசரின் வயது சரிபார்க்கப்பட்டு, 18 வயதிற்கு மேலானவர்களுக்கு மட்டும் இதுபோன்ற கண்டெண்டுகள் அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சாட்ஜிபிடியில் ஆபாசத்தை அனுமதிக்கப் போகிறார்களாம். வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என அறவிக்கப்பட்டுள்ளது.
ஆபாசத்திற்கு அனுமதி
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "எங்கள் யூசர்களின் வயதைச் சரிபார்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பெரியவர்கள் பெரியவர்கள் போல நடத்தலாம் என்ற கொள்கையின் கீழ், 18 வயதைத் தாண்டியவர்களுக்கு அடல்ட் கண்டெண்டுகளை அனுமதிக்கவுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
சாட்ஜிபிடி எப்படி இயங்கி வருகிறது என்பதே மொத்தமாக மாறப்போகிறது என்பதையே இது குறிக்கிறது. இதுநாள் வரை ChatGPT-யில் பாலியல் அல்லது ஆபாச கண்டெண்டுகளுக்கு எந்தவொரு அனுமதியும் இல்லாமல் இருந்தது. க்ராக் போன்ற ஏஐ டூல்களில் வயது வந்தோருக்கான கண்டெண்டுகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாத நிலையில், சாட்ஜிபிடியில் கட்டுப்பாடுகள் இருந்தது. இதனால் ஒரு தரப்பு யூசர்களை சாட்ஜிபிடி இழந்து வந்தது. அதைக் கருத்தில் கொண்டே சாட்ஜிபிடி இந்த முடிவை எடுத்துள்ளது.
குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாது போல
அதேநேரம் சாட்ஜிபிடியின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது. ஏனென்றால் இத்தனை காலம் யூசர் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என்று சாட்ஜிபிடி சொல்லி வந்தது. அதில் வயது வந்தோருக்கான எந்தவொரு கண்டெண்டுகளும் இல்லாமல் இருந்தது. இதனால் மைனர் குழந்தைகளும் கூட அதிகம் சாட்ஜிபிடியை பயன்படுத்தி வந்தனர். ஆனால், சாட்ஜிபிடி தனது முடிவை மாற்றிவிட்டதால் ஏஐ டூல்களை குழந்தைகளிடம் நம்பி யூஸ் செய்யக் கொடுக்க முடியாத சூழலே உருவாகியுள்ளது.
ஏனென்றால், என்ன தான் வயது சரிபார்ப்பு பிராசஸ் இருக்கும் என்றாலும் அதை ஏமாற்றுவது அவ்வளவு கடினம் இல்லை. பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் நாம் இதை பார்த்திருக்கிறோம். இதுவே பெற்றோரை அச்சப்பட வைத்திருக்கிறது. மேலும், ஏஐ உலகம் எச்சரிக்கையான யூசேஜ் என்பதில் இருந்து பொழுதுபோக்கிற்கான ஒரு டூலாக எவ்வளவு விரைவாக மாறுகிறது என்பதையே இது காட்டுகிறது.
இன்னொரு மேஜர் அப்டேட்
இது தவிர மற்றொரு அப்டேட்டும் வரவுள்ளது. அதாவது கிட்டத்தட்ட மனிதரைப் போலவே பேசும் வகையிலும் சாட்ஜிபிடியை அப்டேட் செய்கிறார்களாம். இதன் மூலம் நாம் எதாவது ஜாலியாக பேசினால் அதுவும் மனிதர்களைப் போல ஜாலியாக பேசும். எமோஜிக்களை கூட அனுப்புமாம். இவை அனைத்தும் சாட்ஜிபிடியை மேலும் பல யூசர்களிடம் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications