பணத்தை அள்ளிக் கொடுக்கும் குரு... 2025 இல் குரு பார்வையால் நன்மை பெறவுள்ள 8 ராசிகள்?
சென்னை: குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். கெட்ட விஷயங்களை எல்லாம் எடுத்துவிட்டு நல்லதை கொடுப்பார். குரு பார்வை இருந்தால் திருமணம் நடைபெறும் என்று கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் குரு ஏராளமான பலன்களை கொடுப்பார். அந்த வகையில் குரு பகவனால் 2025 ஆம் ஆண்டில் அதிகளவு பயன்பெறவுள்ள ராசிகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மேஷம் ராசிக்கு குரு பகவான் மூன்றாம் இடத்தை பார்க்கிறார். இதை விபரீத ராஜயோகம் என்று சொல்வார்கள். இதனால் உங்கள் புகழ் மற்றும் அந்தஸ்து உயரும். உத்யோகஸ்தர்களுக்கு பெரு நிறுவனங்களில் உயர் பதவிகள் கிடைக்கும். மேஷ ராசியின் ஒவ்வொரு முயற்சிக்கும் வெற்றி கிடைக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்கும். இத்தனை நாள் வாழ்க்கை ஒரே நேர் கோட்டில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் சென்றிருக்கும். இந்தமுறை உங்களுக்கு பெரிய முன்னேற்றம் கிடைக்கப் போகிறது.

தைரியம் பல மடங்கு அதிகரிக்கும். குரு பகவான் ஏழாம் இடத்தையும் பார்ப்பதால் வெளிநாடு வேலை வாய்ப்பு வெற்றிகரமாக அமையும். தகுதி தேர்வுகளிலும் வெற்றி வரும். குரு ஒன்பதாம் இடத்தையும் பார்க்கிறார். இதனால் அதிர்ஷ்டங்கள் கொட்டும். மேலும் 11வது இடமான லாப ஸ்தானத்தை பார்க்கிறார். அங்கு ஏற்கனவே ராகு உள்ளார். குருவுடன் ராகு இணைவதால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத ஏராளமான பலன்கள் கொட்டப் போகிறது.
ரிஷபம் ராசிக்கு குரு இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த அமைப்பால் தங்க நகைகள் அதிகம் சேரும். கணவன் - மனைவி இடையே இருந்த நீண்டகால மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு பகவான் ஆறாம் இடத்தை பார்க்கிறார். அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும்.
மேலும் குரு பகவான் எட்டாம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் சொத்துகள் அதிகம் சேரும். வீடு, மனை, வாகனம் என்று நீங்கள் நினைத்த மாற்றங்கள் நடந்தே தீரும். போதும் போதும் என்றளவுக்கு உங்கள் மனம் திருப்தியடையும். முக்கியமாக உங்கள் மனைவியை நம்பி எடுக்கும் முடிவுகள் சிறப்பான முடிவுகளை தரும்.
மிதுனம் ராசிக்கு குரு ராசியிலேயே அமர்ந்துவிட்டார். இதனால் பலன்கள் கொட்டப் போகின்றன. ராசியில் இருந்து ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் இடங்களை குரு பார்க்கிறார். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்தாண்டு திருமணம் நடப்பது உறுதி. குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைக்கூடும்.
ஆரோக்கியத்தில் பெரியளவு முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு பயணங்களால் ஏராளமான அதிர்ஷ்டங்கள் கொட்டப் போகின்றன. மொத்தத்தில் இந்தாண்டு மிதுனத்துக்கு ஏற்றங்கள் தான் இருக்கும்.
சிம்மம் ராசிக்கும் குரு பகவான் இந்தாண்டு விபரீத ராஜயோகத்தால் ஏராளமான பலன்களை அள்ளித் தரப்போகிறார். குரு பகவான் 11வது இடத்துக்கு செல்கிறார். அது லாப ஸ்தானம். யோகத்துக்கு பெயர் பெற்ற குரு லாபத்துக்கு வருகிறார் என்பதால் லாபம் பல மடங்கு அதிகரிக்கும்.
துலாம் ராசிக்கு குரு ஒன்பதாம் இடத்துக்கு வருகிறார். ஒன்பதாம் இடத்தில் குரு வந்தால் ஓடிப்போனவர்களுக்கு கூட நல்லது செய்வார் என்று கூறுவார்கள். தொட்டது துலங்கும். அதன் காரணமாக இந்தாண்டு துலாம் ராசியும் ஏராளமான பலன்களை அனுபவிக்க போகிறது.
தனுசு ராசிக்கு குரு ஏழாம் இடத்துக்கு செல்கிறார். வெளிநாட்டு பயணங்களால் ஏற்றம் கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். குரு கும்பம் ராசிக்கு ஐந்தாம் இடத்திலும், மீனம் ராசிக்கு நான்காம் இடத்துக்கும் செல்கிறார். இதனால் அந்த ராசிகளும் இந்தாண்டு சிறந்த பலன்களை அனுபவிக்க போகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications