கும்ப ராசிக்கு நிலம், வீடு வாங்கும் யோகம்.. தொட்டதெல்லாம் வெற்றியாகும் காலகட்டம்.. என்ஜாய்
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கும்ப ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ பழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான விஷயங்களிலும் வெற்றியையும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள். யாரிடமும் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருப்பது நல்லது. மனத் தாங்கல்கள் யாருடனாவது இருந்தால் சமாதான உடன்படிக்கை செய்து கொள்வது நல்லது. அரசுத் துறை, உத்தியோகம், தொழிலில் தைரியமாக இறங்கலாம்.
பயணங்கள்
நிறைய பயணங்கள் செய்வது அனுகூலத்தை ஏற்படுத்தும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் போன்ற அனைத்து மாற்றங்களும் உண்டாகும். வங்கிகளின் உதவிகள் பெரியளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும். வார்த்தைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
காது, மூக்கு, தொண்டை, பற்கள், தலைவலி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. படுக்கையில் மிகுந்த கவனம் வேண்டும். அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாத நண்பர்களால் பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் தெய்வ வழிபாடு சிறந்த நல்ல மேன்மையை ஏற்படுத்தும்.
தொழில்
ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை. மற்றபடி அனைத்து விஷயங்களிலும் அனுகூலமும், ஏற்றமும் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களில் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சிறப்பு பலன்கள் கிடைக்கும். யாரைப் பற்றியும் யோசிக்காமல் ஆடிப்பெருக்கன்று நல்லது செய்ய முயற்சிப்பவர்களுக்கு வெற்றி ஏற்படும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
யாரிடமாவது பகைமை இருந்தால் அவர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொங்குவதற்கான யோகம் உண்டாகும். நிலம், வீடு, இன்டீரியர், வாகனம், புதிய விஷயங்கள், புதிய வீடு, புதிய நிலம் என அதிர்ஷ்டங்களை அள்ளிச் செல்லும் காலகட்டமாக இருக்கும்.
பண வரவு
தொழிலில் அபரிமிதமான லாபங்கள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான யோகம் உள்ளது. ஆரோக்கியத்திலும், பேச்சிலும் அதீத கவனம் தேவை. அனைத்து விதமாந அதிர்ஷ்டங்களும் கைகூடி வருவதற்கான காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications