ரிஷப ராசிக்கு ஆடியில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. கோபம், சோம்பலை தவிர்த்தால் நீங்க தான் ராஜா
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.
இந்த ஆடி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற எல்லா விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். அபரிதமிதான வளர்ச்சிகள் ஏற்படும். பிள்ளைகளின் உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், சலசலப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கனவுகள் நிறைவேறும்
பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். பெற்றோர், பெரியோர்களின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். பயணங்கள் சமயத்தில் புதிய அறிமுகங்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதிய அறிமுகத்தால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஜென்மத்தில் குருவும் செவ்வாயும் இருப்பதால் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.
யோகம் வரும்
கோபப்படுவது, எதிர்பாலினத்திடம் சண்டை சச்சரவுகளை வைத்துக் கொண்டால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கூடா நட்பால் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உத்தியோகத்தில் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அடுத்தடுத்து யோகங்கள் உண்டாகும். செல்வாக்குகள் உயரும்.
தொழில்
தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூமி தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு இனி அந்தப் பிரச்சனைகளில் இருந்தெல்லாம் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது, மண் வாங்குவது எல்லாமே செய்து மகிழ்வீர்கள். பெரிய மனிதர்களுக்கு ஆத்ம ரீதியான நம்பிக்கை ஏற்படும். சுப காரியத் தடைகள் எல்லாமே நீங்கும்.
திருமண யோகம்
நீங்கள் எதிர்பார்த்த நல்ல வரன் கிடைக்கும். புதிய வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திருமண யோகம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு படிப்பிற்கான பணம் உங்களைத் தேடி வரும். ஆடி மாதம் நல்ல மேன்மையைத் தருவதற்கான வாய்ப்புள்ளதால் சோம்பல் தனத்தை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சண்டைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையில் கவனம் தேவை. சர்க்கரை, ரத்த அழுத்தம் பிரச்சனைகளுக்கு மருந்துகள் உட்கொள்ளாமல் விடுவது, மருத்துவர்கள் ஆலோசனைகளைத் தவிர்ப்பதால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
உங்களுடைய இஷ்ட தெய்வங்கள், குருமார்கள், மகான்கள் வழிபாடு உங்களுக்கு அற்புதமான மாற்றத்தையும், முன்னேற்றதையும் ஏற்படுத்தும். இந்த ஆடி மாதம் வளர்ச்சியையும், மேன்மையையும் தரும் மாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications