மிதுன ராசிக்கு சூரியனால் வரப்போகும் கண்டம்.. அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. ரொம்ப கவனம்
Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்கே சூரியன் வரும் மாதம் தான் ஆனி மாதம். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். வியாழக்கிழமை தோறும் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்வது நல்லது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், முதுகுத் தண்டுவடம், தலைவலி பிரச்சனைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் விஷயத்தில், கையெழுத்துப் போடக்கூடிய விஷயத்தில் அவசரப்படாமல் இருப்பது நல்லது.
அனுகூலம்
சட்டத்திற்குப் புறம்பானவர்களுடைய நிழல் கூட அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளுடைய அமைப்பு அற்புதமாக உள்ளது. குடும்பத்தில் புதிய வரவுகள் வரக்கூடிய பிராப்தம் அனுகூலத்தை ஏற்படுத்தும். துணை விஷயத்தில் அற்புதமான ஏற்றத்தைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இருந்த இடைவெளிகள் குறையும்.
சுப விரையம்
வேற்று மதத்தினரால் அனுகூலங்கள் காணப்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். ஆனி மாதத்தில் சுப விரையங்கள் திடீரென ஏற்படும். சுப செலவுகளுக்கு மிதுனத்துக்கு உத்தரவாதம் உண்டு. உத்தியோகத்தில், கூட்டுத் தொழிலில் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகளை எடுத்தால் பெரிய சிக்கலையும், கஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
எச்சரிக்கை
வண்டி, வாகன விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம், போலீஸாரிடம் தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. செல்போன்களில் வரும் லிங்குகளை தொட்டு பாதிப்பைச் சந்திக்கும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு பேசினால் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications