கொரோனா வைரஸ் பிரச்சினை 2021 நவம்பர் வரை நீடிக்கும் - இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எக்ஸ்க்ளூசிவ்
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரை குடித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கம் உலக பொருளாதாரத்தை தரைமட்டமாக்கியுள்ளது. இந்த
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் 15 லட்சம் பேரை பாதித்துள்ளது லட்சக்கணக்கான மக்களின் உயிரை குடித்துள்ளது. இந்த நோய் தாக்கம் உலக பொருளாதாரத்தை பாதித்துள்ளது பல கோடி மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பசியும் பிணியும் மக்களின் உயிரை குடித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் வரும் ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக குறைந்தாலும் இந்த பொருளாதார மந்தநிலையும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளும் நவம்பர் 2021ஆம் ஆண்டுவரை நீடிக்கும் என்கிறார் இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த். நமது ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றியும் ஜோதிட ரீதியான காரணங்களையும் கூறியுள்ளார் அபிக்யா ஆனந்த்.
Recommended Video
நவம்பர் 2019 தொடங்கி 2020ஆம் ஆண்டு வரை உலகம் ஆபத்தான நிலையை அடையும் என்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி நான் கணித்திருந்தேன்.
அது வைரஸ் மூலம் உலகத்திற்கு ஆபத்தாக பரவியுள்ளது. இந்த அபாயத்தை எதிர்த்து உலகமே போராடி வருகிறது வைரஸ்க்கு எதிரான போராட்டமாகவும் பொருளாதார மந்தநிலைக்கு எதிரான போராட்டமாகவும் உள்ளது. இதனைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். விரைவில் இது முடிவுக்கு வரும் என்கிறார் அபிக்யா.
டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை மீண்டும் ஒரு ஆபத்தான நிலையில்தான் இருக்கிறது என்று கணித்துள்ளார் இந்த இளம் ஜோதிடர். இந்த பிரச்சினை எப்போது தீரும் என்பது பற்றி அபிக்யா ஆனந்த் கூறியுள்ளதை பார்க்கலாம்.

தனுசு ராசியில் குரு பகவான்
நவ கிரகங்களில் இப்போது குரு பகவான் அதிசாரம் பெற்று மகரம் ராசியில் உள்ள சனி, செவ்வாயுடன் சேர்ந்திருக்கிறார். இந்த கிரக சேர்க்கை மே 4ஆம் தேதி வரை நீடிக்கும். மே மாதம் செவ்வாய் கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஜூன் மாதம் இறுதியில் குரு மீண்டும் தனுசு ராசிக்கு மாறுகிறார். குரு பகவான் நேர்கதியில் நவம்பர் மாதம் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார்.

சூரிய கிரகணம்
இந்த சனி குரு சேர்க்கை சில மாற்றங்களை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனுசு ராசியில் சனி, கேது, குரு, புதன், சூரியன் ஆகிய ஐந்து கிரகங்கள் சேர்ந்திருந்தன. இந்த கிரகங்களுடன் சந்திரன் இணைந்து ஆறு கிரக சேர்க்கை பெற்றிருந்த போது சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த கிரக சேர்க்கைக்களும் சூரிய கிரகணமும் நிகழ்ந்த போது சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இதே போல இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அரசு நடவடிக்கை
கடந்த ஆண்டு தனுசு ராசியில் கூடிய கிரகங்கள் இந்த ஆண்டு மகரம் ராசியில் இணைகின்றன. இப்போது இருக்கிற பொருளாதார குழப்பநிலைக்கும் காரணம் கிரக சேர்க்கைதான். தென் கிழக்கு பகுதியில் சனி, செவ்வாய் குரு ஆகிய கிரகங்களின் சேர்க்கை இந்த பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. பசியும் பிணியும் மக்களின் உயிரை பறித்துக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2021ல் பிரச்சினை முடியும்
'யதா ராஜா ததா பிரஜா' இதன் அர்த்தம் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. எனவே மக்கள் இப்போது நோய் என்கிற மிகப்பெரிய இடற்பாட்டில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர். இதில் இருந்து மக்களை காக்கவேண்டியது அரசின் கடமை. இந்த பிரச்சினை எப்போது தீரும் எப்போது இது முடிவுக்கு வரும் என்று யோசிக்கிறீர்களா? அடுத்த ஆண்டு அதாவது 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் மக்கள் நிம்மதியடைவார்கள்.

பாதிப்புகள் நீங்கும்
ஜோதிடம் என்பது விஞ்ஞானம்தான் நவகிரகங்களும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்மை செய்யும் வகையிலேயே சஞ்சரிக்கின்றன. சூரியன்,சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் நன்மை செய்கின்றனர். வராஹமிகிரர் இந்த பிரபஞ்சத்தில் வசிக்கும் மக்களின் நன்மைக்காக சில ஸ்லோகங்களை கூறியுள்ளார். அவற்றை படிப்பதன் மூலம் சில பாதிப்புகள் நீங்கும்.

உணவே மருந்து
நம்முடைய செயல்கள் நல்ல செயல்களாக இருக்கவேண்டும். பிற உயிர்களை இம்சிக்கும் வகையில் இருக்கக் கூடாது. பசு வதை செய்யக்கூடாது. விலங்கு வதை கூடாது இறைச்சி உட்கொள்வதை நிறுத்துங்கள். நம்முடைய உணவு பழக்கத்தை பழமைக்கு மாற்றுவதன் மூலம் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மஞ்சள் பொடியும் சீந்தில் கொடிக்கும் அருமருந்து. அதை பயன்படுத்துவதன் மூலம் நோய்கள் தாக்குவதில் இருந்து தப்பிக்கலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் அபிக்யா ஆனந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications