வசந்த பஞ்சமிக்குப் பின்.. கோடீஸ்வர யோகம் பெறும் 5 ராசியினர்.. பணம் கொட்டப் போகுது
வசந்த பஞ்சமி: வசந்த பஞ்சமி யோகம் நிறைவடைந்த பின்னர் ரிஷபத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். எந்தெந்த ராசியினர் என்னவிதமான பலன்களை பெறப் போகின்றனர் என்று விரிவாகப் பார்க்கலாம்.
முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குரு பகவான். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர் அனைத்து விதமான யோகங்களையும் பெறுவர். கல்வி, செல்வம், புகழ், பெயர், அதிர்ஷ்டம் என அனைத்து செல்வ செழிப்புகளையும் பெறுவார்கள். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சியில் உள்ளார்.

பிப்ரவரி 4ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். சரஸ்வதி தேவியின் அருளைப் பெறும் வசந்த பஞ்சமிக்குப் பின்னர் நடக்கும் குரு வக்ர நிவர்த்தியால் சில ராசியினருக்கு பணம் சார்ந்த ஆதாயங்கள், அற்புத பலன்கள் கிடைக்கப் போகின்றனர். எந்த ராசியினர் செல்வத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - குரு வக்ர நிவர்த்தி அடைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி பெருகும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். திடீர் பண வரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவுகள் பலப்படும். வேலை, தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல பலனைக் காண்பீர்கள்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். எந்த வேலையை தொடங்கினாலும் அதில் வெற்றியைக் காண்பீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் லாபம் பெருகும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லத் தொடங்குவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இழுபறியில் இருந்து வந்த அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக பல புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு வசந்த பஞ்சமிக்குப் பிறகு நல்ல யோகங்கள், அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை, தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண வரவுகள் உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் வெற்றியை காண்பீர்கள். குருவினுடைய மாற்றம் உங்களுக்கு திடீர் பண வரவைக் கொடுக்கும். நீங்கள் சார்ந்த ஒவ்வொரு துறையிலும் எதிர்பார்த்த வெற்றியும், மகிழ்ச்சியும் பெறுவீர்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வையால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். படைப்பாற்றல் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் அன்பு, புரிதல் ஏற்படும். வேலையில் பாராட்டைப பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழி ஏற்படும். வணிகம் தொடர்பாக விஷயங்களில் வருமானம் பெருகும்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு குருவின் அருளால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு தொடர்புகளால் நல்ல ஆதாயத்தை காண்பீர்கள். கடின உழைப்பு, விடாமுயற்சியால் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல பதவி கிடைக்கும். நிலுவையில் இருக்கும் வேலைகளை செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு பெறுவீர்கள். நம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications