Rishabam rasi palan: ரிஷப ராசிக்கு நீசபங்க ராஜயோகம்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது

Subscribe to Oneindia Tamil

ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்னி ராசக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

aippasi-matha-palan-2025-lets-see-what-kind-of-benefits-and-fortunes-that-rishabam-people-will-get

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியும், 6 ஆம் அதிபதியுமான சுக்கிர பகவான் கன்னி ராசியில் இருக்கிறார். 6க்கு உரியவர் நீசமாக இருப்பது ஒரு யோகமாகும். நோய் விலகும், கடன் அடையும், கடன் சார்ந்த விஷயம் நெருக்காது. இருப்பினும் ராசி அதிபதி என்பதால் அவர் நீசமாகும்போது அக்டோபர் 16 ஆம் தேதி வரை கவனமாக இருப்பது நல்லது. அதுவரை புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது.

அக்டோபர் 16 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன், சூரியனுடம் சேர்ந்து ஆட்சி பலம் பெறுவதால் சுக்ராதித்ய மகா ராஜயோகம் உண்டாகும். இதனால், சூரியனின் நீச்சத் தன்மை நீங்கி உங்களுக்கு மிகப்பெரிய நீசபங்க ராஜயோகம் உண்டாகும். 16 ஆம் தேதிக்குப் பிறகு ரிஷப ராசிக்கு மிகப்பெரிய யோகமான காலகட்டமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தடை, தாமதம், சிக்கல்கள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.

திடீர் வருமானம்

நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். புதனைப் பொருத்தவரை 2, 5 ஆம் அதிபதி. 6 ஆம் வீட்டில் இருக்கிறார். விருச்சிகத்துக்கு புதன் குரு பார்வையில் பெறும்போது திடீர் வருமானம், திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குடும்ப வாழ்க்கை ஒற்றுமையாக இருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

குழந்தை பிறப்பதற்கான யோகம் உண்டாகும். பண வரவு, பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். 10 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல காலகட்டமாக இருக்கும். செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் மனைவி, கணவன் மூலமாக வருமானம் வரும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் குரு பார்வை பெறும்போது கண்டிப்பாக முழுக்க முழுக்க நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

யோக காலம்

நல்ல பிரதிபலன்கள் கிடைக்கும். உழைப்பிற்கான பிரதிபலனைப் பெறுவீர்கள். நினைத்ததெல்லாம் நடக்கும் யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் தொழிலில் நல்ல வளர்ச்சி, எதிர்பார்த்த லாபம் போன்றவை ஏற்படும். சூரியன் நீச்சமாக இருந்தாலும் சுக்கிரனோடு சேர்ந்து வரும்போது நீச்சபங்க ராஜயோகம் உருவாவதால் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

தாயின் அன்பு, அரவணைப்பு கிடைக்கும். வீடு, மனை, சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு பிரகாசமான மாதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+